திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் ஒப்பந்தம் இதில் ஊழல் நடைபெற்றுள்ளது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Spread the love

2ஜி அலைக்கற்றை வழக்கில் விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் சிக்குவார் முதலமைச்சர்.

புதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை விவசாயிகளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேட்டி

 

 

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியது

 

 

மற்ற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சேலம் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது இதனை குறைத்திடும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகள் சேர்ந்த பொதுமக்கள் வெளி மாநிலங்களுக்கு அதிகளவில் சென்று வந்ததால் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது தொற்று பாதிப்பினை குறைக்க அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 74 ஆயிரத்து 695 பேருக்கு முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியில் கைகளை விட்டம் 7 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டு 1500 மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி இதன் காரணமாக சேலம் மாவட்டத்திலிருந்து 26 மாணவ மாணவியர் மருத்துவக் கல்வியில் சேர்ந்து பயில வாய்ப்பு உருவாகியுள்ளது அகில இந்திய அளவில் சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது மகிழ்ச்சிகரமான செய்தி ஆகும்

 

 

திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் ஊழல் நடைபெற்று வருவதாக வேண்டுமென்றே திட்டமிட்டு நாள்தோறும் அறிக்கை வெளியிட்டு அவதூறு பரப்பி வருகிறார் அவரது அறிக்கை வெளி வராத நாளே இல்லை அவரை அறிக்கை நாயகன் என்றே சொல்லலாம் வீட்டிலேயே இருந்துகொண்டு வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருகிறார் 2ஜி அலைக்கற்றை ஊழல் மிகப்பெரிய ஊழல் தமிழகத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட் தொகையான ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்தது திமுக தான் அவருடைய கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு 2 ஜி அலைக்கற்றை ஊழல் நிகழ்ந்துள்ளது அவருடைய குடும்ப தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் இந்த ஊழலில் கைமாறி உள்ளது மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர் அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிக்குவார்

 

 

அதிமுக ஆட்சியில் எங்கும் சிறு தவறு கூட நடைபெறாத வகையில் உலக வங்கி விதிமுறைப்படி ஆன்லைன் முறையில் டெண்டர் விடப்பட்டது இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வது உலக வங்கி தான் இதில் தவறு ஏதும் செய்துவிட முடியாது ஆனால் திமுக ஆட்சியில் ஒப்பந்தம் விடப்படும் போது நூறு கோடிக்கு விடப்பட்டால் பணி முடிந்த பின்பு 172 கோடி ரூபாய்க்கு தொகை வழங்கும் அளவிற்கு 72% அதிகமான தொகையை சேர்த்து ஊழல் நடைபெற்றுள்ளது இதுகுறித்து ஆதாரத்தை விரைவில் நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் ஆட்சி கிடைக்கவில்லை என்ற குமரன் காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து குறை சொல்லி வருகிறார் ஊழலில் திளைத்த ஸ்டாலின் அதிமுக ஆட்சி குறித்து கூற எந்த தகுதியும் அருகதையும் இல்லாதவர் திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட 230 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுவிட்டு கட்டிட பணிகள் முடிவுற்ற போது 410 கோடிக்கு செலவு நடைபெற்றதாக பணத்தை வழங்கியுள்ளனர் மீத்தேன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை போட்டது ஸ்டாலின் தான் என்பதை மறுக்க முடியாது அதை நான் தான் தடுத்து நிறுத்தி உள்ளேன் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம் திமுக ஆட்சிக்காலத்தில் காவிரி பிரச்சினைக்கு எந்தவித தீர்வும் காணப்படவில்லை நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளதுஇல்லாவிட்டாலும் அவதூறு சொல்லாமல் இருக்கலாம்

 

சிறப்பான நிர்வாகம் காரணமாகவே அனைத்து துறைகளிலும் தமிழகம் அகில இந்திய அளவில் முதல் இடம் பிடித்து பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது நஞ்சை புகளூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே 406 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் பவானிசாகர் அணையில் இருந்து பவானி வரை ஆறு தடுப்பணைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் தொடங்கப்படும்

 

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி எடப்பாடி தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி எடப்பாடியில் எதுவும் செய்யவில்லை என குற்றம் சொல்லி இருக்கிறார் எடப்பாடி தொகுதியில் அரசு கலைக்கல்லூரி அரசு பல தொழில்நுட்ப கல்லூரி குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம் மாதம் தவறாமல் எடப்பாடி தொகுதிக்கு வந்து நிறைவேற்றிய திட்டங்களை தொடங்கி வைத்துள்ளது உடன் புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி வருகிறேன் இவை எல்லாம் கண்ணில் தெரியாத அளவிற்கு பச்சை பொய் கூறும் கனிமொழிக்கு பார்வையில் கோளாறு உள்ளது

 

 

திமுக குடும்ப கட்சி வாரிசு கட்சி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர் கார்ப்பரேட் கட்சியான திமுகவின் பெரிய தலைவர்கள் உள்ள நிலையில் இப்போது வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது

 

 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் கிடையாது இந்த சட்டத்தினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதனை தமிழக எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக சொல்ல வேண்டும் தமிழகத்தில் அரசியல் நடத்த எந்தவித காரணமும் கிடைக்காததால் ஸ்டாலின் அகில இந்திய அரசியல்வாதி போல இந்தப் பிரச்சினையை கையில் எடுத்துள்ளார்அரசின் புதிய திட்டம் உதவுகிறது

 

கடந்த ஆண்டில் 23 லட்சம் மெட்ரிக் டன் அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் 37 லட்சம் மெட்ரிக் டன் நெல் அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது வெளிமார்க்கெட்டில் கேட்க ஆளில்லை உற்பத்தி அதிகமாகும் போது விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவதை மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தடுத்து நிறுத்தும் கடந்த 29 வருடங்களாக விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் எனக்கு இது நிச்சயமாக தெரியும் ஸ்டாலின் போன்றவர்களுக்கு தெரியாது

 

போர் பஞ்சம் வறட்சி ஆகியவை ஏற்பட்டால் ஏற்கனவே உள்ள சட்ட நடைமுறைகள் இப்படி விவசாயிகள் பாதுகாக்கப் படுவார்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது விவசாயிகளை சந்தித்து கேட்ட போது மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் குறித்து யாரும் குறை சொல்லவில்லை ஹரியானா பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயிகள் தங்களுடைய விலை பொருட்களை விற்கும் போது 8 சதவீதம் அளவிற்கு வியாபாரிகளுக்கும் ஏஜென்ட் களுக்கும் கமிஷன் கொடுக்க வேண்டியுள்ளது ஆனால் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டம் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை விற்க எந்தவித கட்டணமும் செலுத்தக்கூடாது வரி வசூல் செய்யக்கூடாது என சொல்கிறது மேலும் தங்களுடைய விளைபொருட்களை இந்தியா முழுவதும் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதை மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தடுத்து நிறுத்துகிறது

 

 

கூட்டணியில் இருந்து கொண்டே பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் நடத்துவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த முதலமைச்சர் கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு அவரவர் கட்சிக்கு ஏற்ப கொள்கைகள் கடை பிடி.க்கப்படுகின்றன என்றார் தமிழகத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

சேலம் மாவட்ட செய்தியாளர் குமரவேல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *