டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

Spread the love

டெல்லி என்றாலே உடனுக்கு நினைவுக்கு வருவது நமது நாடாளுமன்ற கட்டிடம்தான். 1927ம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த அழகான கட்டிடம் கட்டப்பட்டது.

 

தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் நிலலையில், அதில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, ரூ.971 கோடி ரூபாய் செலவில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அதன் அருகிலேயே கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த கட்டிடத்தின் கட்டுமான பணியை, ‘டாடா ப்ராஜெக்ட்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், இதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கட்டுமான பணிக்கு தடை விதித்தது. இருப்பினும், பூமி பூஜை நடத்தலாம் என்று அனுமதி அளித்தது.

அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. மதியம் 1.30 மணிக்கு பிரதமர் மோடி, அடிக்கல் நாட்டினார்.

 

பூமி பூஜையையும் நடத்தினார்.

2022ம் ஆண்டுக்குள் கட்டுமான பணி நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் அந்த ஆண்டில், புதிய நாடாளுமன்றம் தயாராகி விடும் என்று தெரிகிறது. அதைத்தொடர்ந்து தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் தொல்லியல் சொத்தாக பராமரிக்கப்படும்.

 

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகள் ரூ.64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. அரசியல் சட்ட அரங்கம் மற்றும் எம்.பி.க்கள் ஓய்வு எடுக்கும் பகுதி, நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

 

லோக்சபாவில் 888 இருக்கை வசதிகளும், மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும் இருக்கும் என தெரிகிறது.

 

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *