சேலத்தில் சொத்து மதிப்பை குறைத்து கிரையம் செய்வதற்கு 1.50 லட்சம் லஞ்சம் பெற்ற துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்

Spread the love

சேலம் மாவட்ட செய்தியாளர்.குமரவேல்

 

 

சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்த நிஷாந்த்(24) என்பவர் திருச்செங்கோடு வடகுராம்பட்டி கிராமத்தில் வாங்கிய 1.18 ஏக்கர் நிலத்தை பத்திரபதிவு செய்ய

சேலம் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த அலுவலகத்தில் பணியாற்றி வந்த முத்திரை கட்டணம் பிரிவு துணை வட்டாட்சியர் ஜீவானந்தம்(41) நில கிரயத்திற்கு சொத்து மதிப்பை குறைத்து காட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக நிஷாந்த் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனடிப்படையில் சேலம் காந்திரோடு பகுதிக்கு வந்து லஞ்சப் பணத்தை பெற்ற ஜீவானந்தத்தை ஏடிஎஸ்பி சந்திரமவுலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து ஜீவானந்தத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *