சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ்யிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்……….

Spread the love

சேலம் மாவட்ட செய்தியாளர் குமரவேல்பேரூராட்சிகளின் பல்வேறு பணிகளுக்கு நிதி ஒப்புதல் வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் சேலம் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்……….

 

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் சேலம் நாமக்கல் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த இரு மாவட்டங்களிலும் மொத்தம் 53 பேரூராட்சிகள் இவரது கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பேரூராட்சிகளுக்கு துப்புரவு பணிகள், குடிநீர் குழாய் பழுதுபார்த்தல், தெருவிளக்குகள் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி ஒப்புதல் வழங்க சம்பந்தப்பட்ட செயல் அலுவலர்களிடம் 10 சதவிகிதம் தொகையை லஞ்சம் பெறுவதாக சேலம் லஞ்ச ஒழிப்பு துறை யினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையிலான குழுவினர் கனகராஜ் செல்லும் அரசு வாகனத்தை பின்தொடர்ந்து அரியானூர் பகுதியில் பிடித்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனத்தில் கணக்கில் வராத ரூபாய் 3 லட்சத்து 50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கனகராஜின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *