தமிழ்நாடு எல்பிஜி எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்டால் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு எல்பிஜி எரிவாயு சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கத்தின் சேலம் மாவட்ட கூட்டத்தில் முடிவு……

Spread the love

சேலம் செய்தியாளர்.குமரவேல்

சேலம் எருமாபாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில துணை செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். தொழிற் சங்கத்தின் மாநில தலைவர் கணேஷ் கலந்துகொண்ட இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

 

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் எல்பிஜி சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் 20 மற்றும் 30 ஆண்டுகளாக ஏஜென்சி காரர்களிடம் பணிபுரிந்து வருகிறார்கள் இவர்களுக்கு மத்திய மாநில அரசு பணி நிரந்தரம் செய்யாமல் என் காலம் தாழ்த்துகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் இந்த எல்பிஜி ஏஜென்சி களை எடுத்து நடத்துபவர்கள் இவர்கள் இந்திய அரசியல் சட்டத்தை அறிந்தவர்கள் தெரிந்தும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தர மறுக்கிறார்கள் சட்டத்திற்கு முரண்பாடாக நடந்து கொள்கிறார்கள். இந்த டிப்ஸை வைத்து தான் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள் மேலும் சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் தங்களுடைய 2 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பவும் பழுது நீக்கும் செலவுகளையும் வாடிக்கையாளர்கள் தரும் டிப்ஸ் மூலமாகவே சரி செய்து வருகிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டிருக்கும் 3 எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் ஏஜென்சி அவர்களும் இணைந்து தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். இந்த தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக தலையிட்டு உழைப்பிற்கான ஊதியத்தை இபிஎப் இஎஸ்ஐ டென்ஷன் போன்ற சலுகைகளை வழங்க பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஏஜென்சி தாரர்களுக்கு ஆணையிட வேண்டும் மற்றும் பிற்காலத்தில் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்பட்டால் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்றும் கூட்டத்தின் வாயிலாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் அமர்ஜோதி பரமசிவம் சிவகுமார் நீலகண்டன் ஜெகநாதன் செந்தில்குமார் சிவ மணிகண்டன் ராமன் செல்வம் ரமேஷ் உட்பட தமிழகம் முழுவதும் இருந்து மாநில பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள் சேலம் மாவட்ட உறுப்பினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *