சேலம் மாவட்ட செய்தியாளர்.குமரவேல்
போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்ததால் பரபரப்பு……..
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் திருத்தச் சட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளதால், கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நாடு தழுவிய போராட்டம் இன்று நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் வணிக நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட
தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அனுமதியின்றி பல்பொருள் விற்பனை நிறுவனத்திற்குள் உள்ளே நுழைந்து தர்ணா
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து குண்டுகட்டாக தூக்கி சென்று வாகனங்களில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.