சேலம் மாவட்ட செய்தியாளர்.குமரவேல்
மேலும் குழந்தையை விற்ற தந்தை மற்றும் 2 புரோக்கர்களை அன்னதானப்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்…….
அன்னதானப்பட்டி தனிப்படை காவல் துறையினர் குழந்தை மீட்பதற்காக ஆந்திரா விரைந்துள்ளது…….
சேலம் நெத்திமேடு கேபி.கரடு பகுதியை சேர்ந்தவர் விஜய்(30) கூலித் தொழில் செய்து வருகிறார் இவரது மனைவி சத்யா(25) இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவதாக கடந்த நவம்பர் 1ஆம் தேதி மறுபடியும் மேச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்ததால், தந்தை விஜயின் வீட்டின் அருகே உள்ள கோமதி என்ற பெண்ணிடம் 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் குழந்தையை வாங்கி கோமதி ஈரோட்டில் உள்ள நிஷா என்ற இரண்டு புரோக்கரிடம் விற்பனை செய்துள்ளார்.இது தொடர்பாக குழந்தையின் தாயார் சத்யா, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் அதிரடியாக புரோக்கர்களான கோமதி, நிஷா ஆகியோரை இருவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பெண் குழந்தையை பவானியில் உள்ள பாலாமணி, சித்ரா என்ற இருவரிடம் குழந்தை விற்பனை செய்ததாக தகவல் தெரிவித்துள்ளார்.குழந்தையை வாங்கிய புரோக்கர்கள் பெங்களூருக்கு கொண்டு சென்று அங்கு இருந்து ஆந்திராவுக்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தொடர்புடைய குழந்தையின் தந்தை விஜய் மற்றும் புரோக்கர்கள் பாலாமணி,சித்ரா ஆகிய மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.அன்னதானப்பட்டி உதவி காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் ஆந்திராவிற்கு குழந்தை மீட்பதற்காக விரைந்துள்ளனர்.
இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.