போரில் குண்டு போட்ட இடம் போல் காட்சியளிக்கும் ரோடுகள் வேலூர்! காண்டிராக்டர் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க து.த.வேண்டுகோள்!

Spread the love

போரில் குண்டு விழுந்த இடம் போல் வேலூர் சாலைகள் உள்ளது. அதற்கு காரணமான காண்டிராக்டர் மீது உடனடியாக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைதலைவர் நரேந்திரன் பேட்டியளித்தார்.

 

வேலூர்மாவட்டம்,வேலூரில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழகத்தை சேர்ந்த திமுகவும் காங்கிரசும் தான் விவசாயிகளை போராட்டத்திற்காக தூண்டுகின்றனர்.

 

முதலில் சி.ஏ.எ குறித்து அறியாததால் பல போராட்டங்கள் நடந்தது. பின்னர் அந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்தது. தற்போதும் வேளாண் சட்டத்தை புரிந்து கொள்ளாததால் இடைத்தரகர்கள் விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டத்தை நடத்துகிறார்கள்.

 

விவசாயிகள் போராட்டத்துக்கு திமுகவினரும் காங்கிரஸ் கட்சியினரும் பிரிவினைவாதிகளும் காரணமாவார்கள்.

 

திமுக கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றியோ பயிர் வளர்ப்பை பற்றியோ ஒன்றும் தெரியாது. நிலத்தில் ரோடு போட்டு நடப்பார் அவருக்கு பயிர் வளர்ப்பை பற்றி ஒன்றும் தெரியாது மயிர் வளர்ப்பை பற்றி மட்டுமே தெரியும்.

 

அவர் தனது போக்கை மாற்றிகொள்ள வேண்டும். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயி என்பதால் வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார். விவசாயம் என்பது கடுமையான ஒன்று விவசாயம் செய்தால் கட்டுபடியாகாது. ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதை வரவேற்கிறோம்.

 

பாஜக தமிழகத்தில் தனியாக வளர்ச்சியையும் ஆட்சியையும் பெறவே போராடி வருகிறோம். பாஜகவிலிருந்து அர்ஜுன மூர்த்தி ரஜினி கட்சிக்கு சென்றார் அதனால் பாஜகவின் பீ டீம் என கூறுவது தவறு.

 

மத்திய பயிர் சேத கணக்கீட்டு குழுவை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து அவர்களின் தொகுதிகளுக்கும் பயிர் சேதங்களை பார்வையிட அழைத்து சென்றிருக்க வேண்டும்.

 

ஆனால் அவ்வாறு செய்யாதது திமுகவின் காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

 

தமிழகத்தில் வேல்யாத்திரை என்பது அரசியலுக்கு அப்பார்பட்டு மக்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம் என்பதை வலியுறுத்தியும் கருப்பர் கூட்டத்தை கண்டித்தும் தான் நடத்தப்பட்டது.

 

வேலூர் சாலைகள் போரில் குண்டு போடப்பட்ட இடம் போல காட்சியளிக்கிறது. எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக உள்ளது. அவற்றை குறித்தும் அதன் கான்டிராக்டர்கள் குறித்தும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக வேல் யாத்திரையை நடத்தவில்லை என்று கூறினார். பேட்டியின் போது பாஜக மாவட்டத்தலைவர் தசரதன்,மாவட்ட செயலாளர் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *