சேலம் மாவட்ட செய்தியாளர்.
குமரவேல்
சேலம், தலைவாசல் அருகே லத்துவாடி பகுதியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், தான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன்; இன்றும் விவசாயம் செய்து வருவதால் கிராமப்புற விவசாயிகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கவே கிராம பகுதிகளில் அதிகளவில் மினி கிளினிக்கள் துவக்கி வருவதாக தெரிவித்த முதலமைச்சர், கிராமத்தில் வாழும் மக்கள் காய்ச்சல், தலைவலி போன்ற சிறு தொந்தரவு ஏற்பட்டால் கூட அருகில் உள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் சென்று உரிய சிகிச்சை பெறலாம் என தெரிவித்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அனைத்து மருந்துகளும் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்-ல் கிடைக்கும். கிராம புற மக்களுக்கு மருத்துவ சேவையாற்ற 1 எம்பிபிஎஸ் படித்த மருத்துவர் எப்போதும் இருப்பார் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், திமுக ஆட்சிக்காலத்தில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்ட போது ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. ஆனால் தானும் அரசு பள்ளியில் படித்த மாணவன் என்பதால் ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கவே உள் இட ஒதுக்கீட்டை கொண்டு வந்ததாகவும் இதன் மூலம் நடப்பு ஆண்டு 313 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு கூடுதலாக 135 மாணவர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநில கூட்டுறவு தலைவர் இளங்கோவன். சட்டமன்ற உறுப்பினர். சின்னத்தம்பி, அரசுத்துறை அதிகாரிகள். கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.