பாஜகவின்  நிர்ப்பந்தத்தால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி இயங்கி வருகிறார்……….சேலத்தில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி …..

Spread the love

சேலம் மாவட்ட செய்தியாளர். குமரவேல்

 

பாஜகவின்  நிர்ப்பந்தத்தால்  எடப்பாடி  பழனிசாமி இயங்கி வருகிறார் என சேலத்தில் சிபிஐ மாவட்ட குழு அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேட்டியளித்தார் .

 

நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.டெல்லியில் விவசாயிகள் 24 நாட்களாக மத்திய அரசின் விவசாய நலனுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்க மறுக்கும் மத்திய அரசு தனக்கு நாடாளுமன்றத்தில் போதிய எம்பிக்கள் பெரும்பான்மை உள்ளது என்ற ஒரே காரணத்திற்கா மூர்க்கத்தனமான போரை விவசாயிகள் மீது திணித்து வருகிறது.

 

 

குறிப்பாக டெல்லியில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர் அவர்களின் உயிர்தியாகம் விலை மதிப்பு மிக்கது அந்த உயிர்களைக் கூட கவலைப்படாத அரசாக மத்திய அரசு உள்ளது. விவசாயிகள் நலனுக்கு எதிரான அந்த சட்டத்திருத்தத்தை திரும்ப பெற மறுத்து வருகிறது.

 

 

மத்திய அரசு வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடைபெறும் அதனை தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனவும் முத்தரசன் தெரிவித்தார். இறந்த அந்த 30 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அனைத்து பகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நடைபெற்று வருகிறது.

 

 

தமிழகத்தில் அதிமுக முதல்வர் தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடியில் துவங்கி உள்ளார் அங்கு பேசிய அவர் தமிழகத்தை பார்த்து இந்தியா முழுவதும் வியர்ந்து வருகிறது என பேசியுள்ளார், நாடே வியந்து தான் போகிறது அதற்கு காரணம் பாஜகவிற்கு சேவை செய்யும் அரசாக அதிமுக இருந்து வருவதை பார்த்து நாடே வியந்து தான் வருகிறது என விமர்சனம் செய்தார்.

 

 

விவசாயிகள் போராட்டம் குறித்து தமிழக முதல்வர் அதில் எந்த பாதிப்பும் இல்லை என கூறுவது சரியான நடவடிக்கை அல்ல மிகவும் கண்டனத்திற்குரியது எனவும் டெல்டா மாவட்டங்களில் 32 லட்சத்து 40 ஆயிரம் ஹெக்டேர் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது வேறு எங்கும் அது செய்யப்படவில்லை என முதல்வர் தெரிவித்ததற்கு அது நல்ல நடவடிக்கை தான் எனவும் தமிழகத்தில் அதிக அளவு நெல் கொள்முதல் நடைபெற்றுள்ளது பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்த பின்பு தற்போது போதுமான அளவு மழை உள்ளிட்ட காரணத்தினால் இது நடந்து உள்ளது எனவும் தெரிவித்தார்.

 

 

மேலும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் இந்த நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது தற்போது மத்திய அரசின் விவசாய நலனுக்கு எதிரான திட்டத்தால் இனி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இருக்காத நிலை ஏற்பட்டுள்ளது அதையும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்தார். மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆதரவான சட்டத்தை இயற்றவில்லை எதிரான சட்டத்தை இயற்றி உள்ளனர் எனவும் குற்றம் சாட்டி அவர் கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக கார்ப்பரேட்  சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது அதை எதிர்க்க வேண்டும் என தெரிவித்தார்,

 

 

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயி நான்கு பேரை வெங்காயம் வைத்திருந்த குற்றத்திற்காக காவல்துறையினர் கைது செய்தனர் எதற்காக கைது செய்தனர் விளைபொருட்களை வைத்திருக்கும் விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்து விட்டு இப்போது அவர்கள் ஏன் கைது செய்தார்கள் என கேள்வி எழுப்பினார். ஆகவே பெருமுதலாளிகள்  இருப்பு வைத்துக் கொள்வதற்கு இந்த சட்டங்கள் உபயோகப்படுகிறது எனவும் பதுக்களை சட்டரீதியாக பதுக்கும் சட்டத்தையே மத்திய அரசுக்கு கார்பரேட்டுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ளது எனவும் தெரிவித்தார்,

 

 

எப்படி ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்துவிட்டு கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றினார்கள் அதுபோல விலை பொருட்களையும் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக பதுக்கல் செய்துவிட்டு கூடுதல் விலைக்கு விற்று மக்களை மேலும் துன்பம் அடைய செய்யும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும் தெரிவித்தார், எனவே சட்டசபையை கூட்டி விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்த்து தமிழக முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மேலும் மின்சார திருத்த சட்டம் குறித்து மத்திய அமைச்சர் தமிழகம் வரும் போது தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என கேட்டுள்ளார் சட்டமாக்கிய பின்பு விலக்கு அளிக்க முடியாது என்பது கூட தெரியாத முதல்வராக அவர் உள்ளார்,

 

 

குறிப்பாக மின்சார திருத்த சட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் விசைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் உள்ளிட்ட எவையும் இனி இருக்காது எனவும் எச்சரித்தார்.

 

 

மத்திய அரசின் திட்டங்களுக்கு துணைபோகும் முதல்வராக எடப்பாடி இருக்கிறார் தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் முதல்வராகவே அவர் இருக்கிறார் தேர்தல் சமயத்தில் தமிழக மக்கள் அவருக்கு தக்க பதிலடி தருவார்கள் எனவும் கருத்து தெரிவித்தார்,

 

 

மேலும் எடப்பாடி பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கி அதிமுகவின் பிரச்சார விழாவில் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் தரப்படும் என அறிவித்துள்ளார் அது அதிமுகவின் பிரச்சார விழாவா அல்லது அரசு விழாவா என விமர்சனம் செய்தார்,

 

 

நாடு முழுவதும்கொரோணா பாதிப்பின் காரணமாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்தனர் அதை கொடுக்க முடியாமல் தற்போது தேர்தல் வர உள்ள சமயத்தில் .2500 அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் தெரிவித்தார்.

 

 

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாதார ரீதியாக நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவித்த அவர் கொரோணாவிற்கு பின்பு தமிழகத்தில் இரண்டு மிகப்பெரிய புயல்கள் மற்றும் இயற்கை சீற்றத்தால் டெல்டா பகுதி முழுவதும் பாதிப்பு அடைந்துள்ளது ஏக்கருக்கு 30 ஆயிரம் தரவேண்டுமென பல எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்,

 

 

குறிப்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏக்கருக்கு 40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார் அதுபற்றியெல்லாம் தமிழக முதல்வர் கவலைப்படாமல் மக்களின் வரிப் பணத்தை எடுத்து குறைந்த அளவு கூட வழங்காமல் வெறும் 2500 ரூபாய் அறிவித்திருப்பது தேர்தல் யுத்தி எனவும் விமர்சனம் செய்தார்.

 

எடப்பாடி தொகுதி அதிமுகவின் எங்கு கோட்டை என தமிழக முதல்வர் கூறியிருப்பது வேடிக்கையானது எனவும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் திமுக கூட்டணி 8000 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளது அதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம் அது எங்கு கோட்டையா என்று பதிலளித்தார்.

 

தமிழக முதல்வர் மத்திய அரசை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நெருக்கடியில் உள்ளார் அது உணர்வுபூர்வமாக இல்லை என்றாலும் தன்னை காத்துக் கொள்ள மத்திய அரசின் முடிவுகளை அமல்படுத்தி வருகிறார் அதனால் மத்திய அரசின் திட்டங்களுக்கு துணை போகிறார் எனவும் தூங்குபவரை எழுப்பி விடலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது அப்படிப்பட்ட நிலையில் எடப்பாடிபழனிசாமி இருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

 

 

எட்டு வழி சாலை திட்டம் குறித்து பேசிய அவர் ஒரு மிகப்பெரிய அளவில் இந்த திட்டம் செயல்பட உள்ளது இதனால் பல விளைநிலங்கள் இயற்கை வளங்கள் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் பெரிய அளவில் கமிஷனுக்காக மட்டுமே இந்த திட்டம் செயல்படுகிறது. குறிப்பாக சேலம் முதல் தாம்பரம் வரை மட்டுமே இந்த சாலை திட்டம்உள்ளது ஆனால் தாம்பரத்திலிருந்து சென்னை செல்ல இரண்டு மணி நேரத்திற்கு மேல் நேரம் ஆகும் ஏற்கனவே இரண்டு மூன்று சாலைகள் சேலத்தில் இருந்து சென்னை செல்ல இருப்பதால் அந்த சாலையை விரிவு படுத்தலாம் என தெரிவித்தார். மேலும் தமிழக முதல்வரிடம் இது சம்பந்தமாக கேட்கும் போதெல்லாம் இது மத்திய அரசின் திட்டம் என தமிழக முதல்வர் தெரிவித்திருப்பது வேடிக்கையானது.

 

 

தமிழகத்தில் அதிமுக கட்சியில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கூட பல பிரச்சினைகள் ஏற்பட்டது ஆனால் திமுக கூட்டணியில் அப்படி அல்ல திமுக வேட்பாளர் மு க ஸ்டாலின் என அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளனர் எனவும் அதிமுகவில் பலமுறை இந்த குழப்பம் இருந்து உள்ளது இதற்கு தமிழக முதல்வர் என்ன சொல்லப்போகிறார் எனவும் தெரிவித்தார்.

 

 

மேலும் பாஜக கட்சியினர் பல இடங்களில் பெருமுதலாளிகள் மிரட்டியும் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகின்றனர் பணம் தர மறுக்கும் நிதி நிறுவனங்கள் மீது வருமான வரி சோதனையை நடத்தி பணம் பறித்து வருகிறார்கள் எனவும் குற்றம் சாட்டினார் அரசு விழாக்களை கட்சி விழாவாக தொடர்ந்து நடத்தி வருவது கண்டனத்திற்குரியது எனவும் முத்தரசன் தெரிவித்தார்.

 

 

மேலும் அமித்ஷா அவர்கள் எதிர்க்கட்சியினரை தரம் தாழ்த்தி பேசும் நடவடிக்கை மிகவும் கண்டனத்திற்குரியது என பேசியவர் தமிழகத்தில் தற்போது 2000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் துவங்கப்பட்டுள்ளது அதற்காக புதிதாக பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளதா என கேள்வி எழுப்பி அவர் ஏற்கனவே  தமிழகத்தில் உள்ள சுகாதார நிலையங்களில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ செவிலியர்கள் காலி பணியிடங்கள் நிரப்ப அமலில் உள்ள சூழ்நிலையில் மினி கிளினிக்குகள் துவங்கியிருப்பது மக்களை ஏமாற்றும் செயல் எனவும் தெரிவித்தார்.

 

மேலும் தமிழகத்தில் சிபிஐயின் தேர்தல்அறிக்கை துணை செயலாளர் சுப்பராயன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்த அவர் தமிழகத்தில் அதிமுக வை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக செயல்படுகிறது எனவும் பீகார் தேர்தலில் நடந்தது போல் தமிழகத்திலும் பாஜக அதிமுகவை பலவீனப்படுத்தும் எனவும் எனவும் தெரிவித்தார்.

 

 

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக விற்கு அதிக இடங்கள் தரவேண்டுமென பாஜக நிர்ப்பந்தம் செய்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்  பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியிட முடியுமா என கேள்வி எழுப்பினார்.

 

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு அதை வரவேற்பதாகவும் தெரிவித்தார் ஆனால் இந்தியாவில் அதிகப்படியான மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தான் உள்ளது தமிழக மாணவர்கள் அதில் அதிகம் பேர் சேர முடியாது 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் குறைந்த அளவே மாணவர்கள் அதில் சேர்க்கப்படுவார்கள் இந்த நிலைப்பாட்டை தமிழக அரசு சரி செய்ய வேண்டும் என தெரிவித்தார் இப்பிரச்சனையை திசை திருப்ப குறைந்த அளவிலான இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் கருத்து தெரிவித்தார்.

 

ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு கருத்து கூறப்படும் எனவும் 2020இல் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார் வரும் சுதந்திர தினத்தில் சென்னை கோட்டையில் தேசிய குழுவை ஏற்றுவார் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.3

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *