மின்தடை தேதியை மாற்ற வேண்டும் தொமுச ஆட்சியருக்கு கடிதம் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதில் முற்றிலும் தடை ஏற்படும் சூழலால் வரும் 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடையை வரும் 18 வரை தள்ளி வைக்க வேண்டுமென ஆட்சியருக்கு மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் அ.சரவணன் கடிதம்

Spread the love

திருப்பூர் ஜன 01
வெள்ளிக்கிழமை

மின்தடை தேதியை மாற்ற வேண்டும் தொமுச ஆட்சியருக்கு கடிதம்

பொது மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதில் முற்றிலும் தடை ஏற்படும் சூழலால் வரும் 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடையை வரும் 18 வரை தள்ளி வைக்க வேண்டுமென ஆட்சியருக்கு மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் அ.சரவணன் கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளதாவது.

திருப்பூர் பகுதிகளில் 04 ம் தேதி மின்தடை மற்றும் பராமரிப்புக்காக மின் சப்ளை நிறுத்தப்படுவதால் ரேஷன்கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் வடக்கு பகுதிகளில் வரும் 04 ம் தேதி மின் தடை ஏற்படுவதால் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் முற்றிலும் தடை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதால் உடனடியாக வரும் 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடையை 18 ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டும்.

திருப்பூர் வடக்கு பகுதிகளான வேலம்பாளையம், பெருமாநல்லூர், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பலங்கரை, அவினாசி உள்ளிட்ட மின்சார துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர் வரும் 04 ம் தேதி அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மின் தடை ஏற்படும் என்று திருப்பூர் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

பொங்கல் பரிசை பெறுவதற்கு கடந்த 26 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்பட்டது. வரும் ஜனவரி 4 ம் தேதி முதல் 12 ம் தேதி வரை ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்பைப் பெற நாளொன்றுக்கு 200 பேருக்கு டோக்கன்வழங்கப்பட உள்ளது. இந்தச் சூழலில் 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடையால் பொருட்கள் வழங்கமுடியாததால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்வதில் சிரமம் உள்ளது. இதனால் பொருட்கள் வாங்க வரும் மக்களுக்கும் , கடை ஊழியர்களுக்கு மிடையே தேவையற்ற வாக்கு வாதம் ஏற்பட்டு அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மாறும் வாய்ப்புள்ளது.

வரும் 04 ம் தேதி பகலில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. மின் தடை காரணமாக பல பாதிப்புகள் உள்ள நிலையில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் பகுதிகளில் சிவில் சப்ளைஸ், மகளிர் நடத்தும் ரேஷன் கடைகள் மற்றும் மொபைல் ரேஷன் கடைகள் இயங்குகின்றன. இந்த கடைகளுக்கு மின்சாரத்தால் இயங்கும் எலெக்ட்ரானிக் தராசுகள், எலெக்ட்ரானிக் பில் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளன. எலக்ட்ரானிக் மின் இயந்திரம் பேட்டரியால் இயங்கும். ஆனால், தராசுகள் நேரடி மின் சப்ளையில் இயங்குகின்றன. இதனால் மின்சாரம் தடைபடும் நேரங்களில் தராசை இயக்க முடியாததால், பொங்கல் பரிசு பொருட்கள் சப்ளை நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

எனவே தாங்கள் இது தொட‌ர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடையை 18 ம் தேதி வரை தள்ளி வைத்து பொது மக்களுக்கு தடையில்லாமல் பொங்கல் பரிசு பொருட்களை வழங்க வழிவகை செய்ய வேண்டுமென தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *