தொமுச வின் கோரிக்கை ஏற்று மின்தடை ரத்து 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டது

Spread the love

திருப்பூர் ஜன 02

தொமுச வின் கோரிக்கை ஏற்று மின்தடை ரத்து

04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்பட்டது

பொது மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வாங்குவதில் முற்றிலும் தடை ஏற்படும் சூழலால் வரும் 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடையை வரும் 18 வரை தள்ளி வைக்க வேண்டுமென மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் அ.சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் அதனைத் தொடர்ந்து திருப்பூர் பகுதிகளில் 04 ம் தேதி மின்தடை மற்றும் பராமரிப்புக்காக மின் சப்ளை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டது.

இது தொட‌ர்பாக சரவணன் கூறுகையி்ல் திருப்பூர் வடக்கு பகுதிகளில் வரும் 04 ம் தேதி மின் தடை ஏற்படுவதால் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவதில் முற்றிலும் தடை ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதால் உடனடியாக வரும் 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் தடையை 18 ம் தேதி வரை தள்ளி வைக்க வேண்டுமென்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அதன் காரணமாக தொமுச வின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு திருப்பூர் வடக்கு பகுதிகளான வேலம்பாளையம், பெருமாநல்லூர், நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, பலங்கரை, அவினாசி உள்ளிட்ட மின்சார துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் எதிர் வரும் 04 ம் தேதி அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 வரை மின் தடை ஏற்படும் என்று திருப்பூர் மின்சார வாரியம் ஏற்கனேவே அறிவித்துள்ள உத்தரவை ரத்து செய்யப்பட்டன. அதன் காரணமாக 04 ம் தேதி அறிவிக்கப்பட்ட மின் ரத்து செய்யப்பட்டது.
எனவே துரித நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் தொமுச சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த கடித்தில் கூறப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *