நீதிமன்ற தடையை மீறி மின்வாரிய கேங்மேன் பணிநியமன தொடர்பான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க தொ மு ச கோரிக்கை

Spread the love

திருப்பூர் ஜன 06

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத போக்கு தமிழகத்தில் அதிகரித்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க தொ மு ச கோரிக்கை

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் செயல்படும் போக்கு சமீப காலத்தில் தமிழகத்தில் மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகரித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்த மின்சார வாரிய தொமுச செயலாளர் அ.சரவணன் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ப்படும் என்று அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில் நீதிமன்ற தடையை மீறி மின்வாரிய கேங்மேன் பணிநியமன தொடர்பான பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கேங்மேன் பணிநியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது இந்நிலையில் கேங்மேன் பணிநியமனம் தொடர்பாக சிலர் தங்களுடைய சுய லாபத்துக்காகவும் குறிப்பிட்டவர்களை திருப்பி படுத்த வேண்டும் என்ற என்னத்தில் நீதிமன்ற ஊத்தரவை மீறி பல தவறான தகவல்களை கூறி வருகின்றனர். இது தொட‌ர்பாக செய்திகள் பத்திரிக்கை ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வருவதால் மாண்புமிகு மதுரை உயர் நீதிமன்றம் கடந்த 11 ம் தேதி ஒரு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி செய்திதாள்கள் , ஊடகங்கள் , சமூகவலைதளங்களில் மின்சாரத்துறை, உள்ளாட்சித் துறை உட்பட 10 துறைகளில் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பத்திரிக்கை ஊடகங்களில் பிரசுரம் செய்துள்ளதை கண்டால் அதன் மீது அரசு உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்க்கப்பட வேண்டும் தீர்ப்பளித்துள்ளது. இதன் அடிப்படியில் கேங்மேன் பணிநியமன தொடர்பாக நீதிமன்ற உத்தரவை மீறி பல தவறான கருத்துக்களை வெளியிட்டு வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த பாரபட்சமும் இல்லாமல் தமிழக அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக மின் வாரியத்தில் கேங்மேன் பதவி தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, மின்வாரியம் கேங்மேன் பணிநியமன தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்.

மேலும், தமிழக மின் வாரியத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யாமல், இந்த ஆண்டு கேங்மேன் பணிக்கு 5,000 பதவியை உருவாக்கியதை எதிர்த்து திருப்பூர் மாவட்ட தொ.மு.ச சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

பின்னர் கேங்மேன் பதவிக்கு தற்போதைய நிலையே தொடர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு மின் வாரிய முயற்சிக்கு தடைவிதிக்கப்பட்டது.

மேலும் கேங்மேன் பணி நியமனம் தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் நீதிமன்ற உத்தரவை மீறி கேங்மேன் பணிநியமன பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே நீதிமன்ற உத்தரவை மீறி கேங்மேன் பதவி தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளையும் மின்வாரியம் உடனடியாக நிறுத்த வேண்டும். மேலும் கேங்மேன் பணிநியமன வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது தொட‌ர்பாக எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்க கூடாது. என்றும் தமிழகம் முழுவதும் உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று மின்சார வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *