பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் தொமுச வேண்டுகோள்

Spread the love

திருப்பூர் ஜன 10 ,

பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் தொமுச வேண்டுகோள்

திருப்பூர் பகுதியில் மின்சாரம் தாக்கி பணியின் போது தொழிலாளர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிக்க காரணம் பயிற்சி வகுப்புகள் நடத்தாமலும் பாதுகாப்பு கருவிகளை தொழிலாளருக்கு முறையாக அதிகாரிகள் வழங்காமல் அலட்சிய போக்கு தான் காரணம் என்று தொமுச குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் அவினாசி சாலை மேற்கு சாமுண்டி புரம் பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட வடிவேல் நகர் பகுதியில் மின்சார கம்பத்தில் பணி செய்த போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் நேற்று மதியம் திருப்பூர் சாமுண்டி புரம் பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட வடிவேல் நகர் பகுதியிலுள்ள கம்பத்தில் நெல்லை மாவட்டத்தை அஜீண்குமார் என்ற ஒப்பந்த தொழிலாளி மின்சார கம்பத்தில் பணிசெய்து உள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கி பரிதாபமாக பிரகாஷ் உயிரிழந்தார்.

இது குறித்து மின்சார வாரிய தொமுச செயலாளர் அ.சரவணன் கூறுகையில் திருப்பூர் பகுதியில் பணிகளின் போது மின்சாரம் தாக்கி தினந்தோறும் சிக்கி பாதிக்கப்படுவதும் பலிகடாவதும் முதலுதவி சிகிச்சை கூட அளிக்க மறுக்கும் அதிகாரிகளின் அலட்சிய போக்கு தொடர் கதையாகி வருகிறது மின் விபத்துக்களில் பாதிக்கப்படும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர்களுக்கு எந்தவித மருத்துவ உதவியும் உரிய நிவாரணமும் வழங்காமல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் யாரென்று தெரியாது என்றும் மது போதையில் தான் ஏறினார்கள் என்றும் கூறி அதிகாரிகளின் அலட்சியத்தால் தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதும் பலிகடாவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.

போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் ஒப்பந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதாலும் தான் அவ்வப்போது ஒப்பந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் தற்போது மின்சார தாக்கி உயிர் இறந்த ஒப்பந்த தொழிலாளி அஜித்குமார் குடும்பத்தித்திற்கும் உயிரிழந்தவருக்கு நிவாரணமும் இழப்பீடும் வழங்கவும் இனிவரும் காலங்களில் இது போன்ற மின் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க தொடர் பாதுகாப்பு வகுப்புகளும் பாதுகாப்பு கருவிகளும் வழங்க வழிவகை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *