தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையெட்டி தொ.மு.ச சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது

Spread the love

திருப்பூர் ஜன 12

*தொமுச சார்பில் 8 -ம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா*

*தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையெட்டி தொ.மு.ச சார்பில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு புத்தாடைகள் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது*

திருப்பூர் மாவட்ட தொமுச சார்பில் கடந்த 7 ஆண்டுகளாக தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையையொட்டி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்பு, அரிசி, வெல்லம், தொமுச காலண்டர் உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக மின் விபத்துகளில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தொ.மு.ச சார்பில் தொடர்ந்து பல்வேறு உதவிகள் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8 – ம் ஆண்டு பரிசு வழங்கும் நிகழ்ச்சி போயம்பாளையத்தில் இன்று 12-01-2021 காலை 11.00 மணியளவில் திருப்பூர் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் க. செல்வராஜ் ஆலோசனையின்படியும் தொ.மு.ச பேரவை மாநில துணைச் செயலாளர் டி கே டி மு. நாகராசன் வழிகாட்டுதல்படியும் நடைபெற்றது.

விழாவுக்கு மின்சார வாரிய தொ.மு.ச செயலாளர் அ.சரவணன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் ஆர் ரெங்கசாமி முன்னிலை வகித்தார். இதில் திருப்பூர், அவிநாசி, காங்கேயம், பல்லடம் ,உடுமலை, ஊத்துகுளி , பெருமாநல்லூர் உள்பட மாவட்டம் முழுவதும் மின்வாரியத்தில் பணியாற்றும் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கதர் வேஷ்டி, சட்டை உள்ளிட்ட புத்தாடைகள், பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, கரும்பு, மற்றும் தொமுச காலண்டர் , ஆகியவை வழங்கப்பட்டது.
அப்பொழுது புது பானையில் சக்கரை பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் செயலாளர் பழனிச்சாமி, பெருமாநல்லூர் செந்தில் (எ) பழனிச்சாமி, விஜயன் , ஜோதிபாசு, திருப்பூர் சரவணகுமார் உள்பட தொ.மு.ச நிர்வாகிகள் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மின்சார வாரிய தொ.மு.ச செயலாளர் அ. சரவணன் செய்திருந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *