காணும் பொங்கலை முன்னிட்டு திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் H.M. ஜெயராம், இகாப கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.பகலவன் இகாப அவர்களுடன் கரூர் மாவட்ட ஆயுதப்படை வாளகத்தை பார்வையிட்டு, காவலர்களுடனும், அவரது குடும்பத்தாருடனும் கலந்தரையாடினார். போலீஸ் கேண்டீன், காவலர் காய்கறி அங்காடி ஆகியவற்றை பார்வையிட்டு தூய்மையாக பராமரிக்க அறிவுரை வழங்கினார்.
தூய்மை தினத்தை முன்னிட்டு “ஒரு தலைவர் என்பவர் எப்போதும் முன்னின்று வழிநடத்துவார்” என்ற பொன்மொழிக்கு ஏற்ப
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் H.M. ஜெயராம் , கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலர்களுடன் சேர்ந்து ஆயுதப்படை வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு, வளாகத்தை தூய்மை செய்தார்கள். மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு தங்கள் காவல் நிலையத்தை தூய்மையாகவும், பசுமையாகவும் வைத்துக்கொள்வது தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் அய்யர்சாமி மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர் (பொறுப்பு) சுஜாதா உடனிருந்தனர்.