இரவு பகல் பாராது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை களையெடுக்கும் திருச்சி சரக டிஜஜி முனைவர் ஆனி விஜயா

Spread the love

*புன்னகையை தேடி (Operation Smile), கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்(VVPO) என்ற பெயரில் கிராம மக்களிடையே உள்ள சட்டம்-ஒழுங்கு பிரச்சனை களையெடுக்க இரவு பகல் பாராது பணியாற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர்

இன்று திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் *முனைவர்* *Z.ஆனி விஜயா  இ.கா.ப*  தலைமையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
*V.R ஸ்ரீனிவாசன்*  மேற்பார்வையில், அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமப்பகுதியில் VVPO கார்த்திக்கேயன்(PC;1083)  நியமிக்கப்பட்டார்.

கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர்(VVPO) பணியானது கிராமத்தில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உரிய நேரத்தில் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

VVPO ஒதுக்கப்பட்ட கிராமங்களுக்கு குறைந்தபட்சம் மாதத்திற்கு இரண்டு முறையாவது நேரில் சென்று பார்வையிட வேண்டும்.

மேலும் வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தில் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பேசும் பொழுது

VVPO 24 Hrs உங்களுடன் இருக்கும் _*காவல்துறை நண்பன்*_ என்றும்,

_*புன்னகையை தேடி*_ காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கும் திட்டமும் பற்றியும்,

_*சாலை விதிகளை மதிப்பீர்!*_ _*பாதுகாப்பாக வாழ்வீர்!!*_ என்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும்,

பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்க கொண்டுவந்த _*கேடயம்*_ திட்டம் பற்றியும்,

_*Plastic- ஐ ஒழிப்போம்!*_ _*பசுமையான வாழ்வை உருவாக்குவோம்!!*_ என்று மரக்கன்று விழாவை தொடங்கி மரக்கன்று நட்டு வைத்து இந்த *_பஞ்ச தந்திரத்தை_* கிராம மக்களிடையே மகிழ்ச்சியுடன் உரையாடினார்.

_*காவல்துறையின் பணியானது கடைக்கோடியில் இருக்கும் கிராம மக்களையும் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் திருச்சி சரக காவல்துறையினர்!!!*_

Print Friendly, PDF & Email