சேலம் மாவட்ட செய்தியாளர்.குமரவேல்
ஒரு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை…….
சேலம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சேலம் சித்தர்கோவில், சிவதாபுரம், கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கொலுசு தயாரிப்பு தொழிலில் தொழிலாளர்கள்
ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் கைவினை சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பெட்டி புகார் கடிதத்தை போட்டனர். இதில் தேர்தல் எதிரொலியால்,வெள்ளி மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதால் வெள்ளி தொழிலாளர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெள்ளி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தனர்.