சேலம் மாவட்ட செய்தியாளர்.குமரவேல்
உலக மகளிர் தினத்தையொட்டி சேலத்தில் ஏவிஎஸ் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியைகள் மாணவிகள் கலந்து கொண்டு கேக் வெட்டி உற்சாக கொண்டாட்டம்.
மாரச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, சேலம் அயோதியபட்டிணம் அடுத்துள்ள ஏவிஎஸ் கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தினத்தையொட்டி எளிமையான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்விற்கு கல்லூரி செயலர் ராஜநாயகம் தலைமை தாங்கினார்.
கல்லூரியின் முதல்வர் கல்லூரியின் முதல்வர் பிரியா முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் முதற்கட்டமாக பிரமாண்ட கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
இதனையடுத்து கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகளுடன் தனித்தனியாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்த கல்லூரியின் செயலர் ராஜ விநாயகம் திரண்டிருந்த மாணவிகள் மத்தியில் பேசும்போது, முதலாமாண்டு மாணவர்கள் உட்பட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தற்பொழுது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தேர்வுகள் நடத்த உயர்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாகவும் இது எதுவாக இருந்தாலும் சரி 100 சதவீதம் தேர்ச்சி பெற கல்லூரி நிர்வாகம் மாணவ மாணவிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்தார் அப்பொழுது ஆசிரியைகள் உட்பட மாணவிகள் அனைவரும் கர கோஷங்களை எழுப்பி கல்லூரி நிர்வாகத்திற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.