மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திமுக வேட்பாளர்  காடுவெட்டி ந.தியாகராஜனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தா.பேட்டை ஒன்றியத்தில் பிரச்சாரம்

Spread the love

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு பெற்ற மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்  காடுவெட்டி ந.தியாகராஜன்  உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க தா.பேட்டை ஒன்றியம், வளையெடுப்பு, பாப்பாபட்டி, மேட்டுப்பாளையம், தா.பேட்டை ஆகிய பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு தலைமை ஒன்றியசெயலாளர் K.காமராஜ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியகுழு உறுப்பினர்கள் K.சேகர். ,C.சந்திரமோகன், P.தங்கவேல், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் S.பாண்டியன், மாதர்சங்க ஒன்றியசெயலாளர் S.மரகதம், வாலிபர் சங்க ஒன்றிய தலைவர்கள் சுதாகர், பாலகுமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் R.சுப்ரமணியன், ஆகியோர் வாக்குகளை சேகரித்தனர், தா.பேட்டை கட்சி கிளை செயலாளர் ரெங்கராஜ் நன்றி கூறினார்,,,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *