தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் மாநகராட்சி காண்ட்ராக்டர்களை மிரட்டிய தஞ்சை வேட்பாளர்?

Spread the love

தஞ்சையில் இருக்கும் ஆகாயத்தைப் பெயராகக் கொண்ட முக்கிய கட்சியின் வேட்பாளரான ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டிலிருந்து கொண்டு தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும் என்ற ஆசையில் ஒப்பந்தக்காரர்களை தொலைப்பேசியில் அழைத்திருக்கிறார் அனைவரும் எனக்கு தேர்தல் செலவுக்குப் பணம் இல்லை அனைவரும் பணத்தைக் கொண்டுவந்து கொடுங்கள் பணம் தேவைப்படுகிறது கொடுக்கவில்லை என்றால் சரியாக வராது என ஒப்பந்தக்காரர்களை மிரட்டியுள்ளார் பயந்துபோன ஒப்பந்தக்காரர்கள் 2 லட்சம் முதல் பல கோடி வரை தேர்தல் செலவிற்காகப் பணத்தைக் கொடுத்து உள்ளனர் சில

ஒப்பந்தக்காரர்கள் பணம் இல்லை என்பதால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஊரை விட்டு தலைமறைவாகி விட்டனர் என்கிறது தஞ்சை ஒப்பந்தக்காரர்கள் வட்டாரம் என்ன நடந்தது ஒரு முக்கிய ஒப்பந்ததாரரிடம் பேசினோம் “
“எனக்கு அந்த முக்கிய கட்சியின் வேட்பாளர் அவருடைய நம்பர் இல்லாமல் இன்னொருவர் தொலைப்பேசியில் இருந்து லைனில் வந்தார் வந்தவர் தம்பி தேர்தல் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது உடனடியாக அந்த ஐம்பது எல்லை (Lakhs) கொடுத்துவிடுங்கள் பிறகு பார்த்துக்கொள்ளலாம் அடுத்தது நம்ம ஆட்சிதான் நான் தான் எம்எல்ஏ வெற்றிபெற்றால் அமைச்சராகக் கூட மாறிவிடுவேன் அப்போது உங்களுடைய வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்னால் எல்லாம் செய்யமுடியும் உங்கள் வேலைக்கு எந்த பந்தமும் ஏற்படாது

எங்கும் மறியலும் நடக்காது, எங்கும் போராட்டம் நடக்காது, எந்த பிரச்சினையாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் உடனடியாக அந்த பணத்தைக் கொடுத்து அனுப்பி விடுங்கள் என்று கூறியிருக்கிறார் அண்ணா இப்போது பணமில்லை அனைத்து கட்சிகளும் வாங்கிவிட்டார்கள் என்று சொன்னதற்கு அனைத்து கட்சிகாரர்ளுக்கும் கொடுக்க பணம் இருக்கிறது எனக்குக் கொடுக்க பணம் இல்லையா உடனடியாக கொடுத்து விடுங்கள் அவ்வளவுதான் நான் சொல்லுவேன் மற்றபடி ஒன்றும் சொல்வதற்கில்லை என்று தொலைப்பேசியைத் துண்டித்து விட்டார் நானும் வேறு வழியில்லாமல் பணத்தைக் கொண்டு போய்க் கொடுத்து இருக்கிறேன் பணத்தை அமைதியாக கேட்டாலும் பரவாயில்லை மிரட்டிக் கேட்பது எந்த வகையில் நியாயம் சார் எங்களை மட்டுமல்ல துணிக்கடை காரர்கள், பெட்ரோல் பங்க் முதலாளிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடத்திலும் இரண்டு நாட்களாக ஆட்களை வைத்து கல்லா கட்டி வருகிறார் என்று கொந்தளித்தார் அந்த ஒப்பந்தக்காரர். என்ன கொடுமை வேட்பாளராக இருக்கும் போதே இப்படி என்றால் இவர்கள் நாளை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒப்பந்தக்காரர்கள் மட்டுமல்ல மக்களையும் விட்டு வைக்க மாட்டார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது…

தஞ்சை மாநகராட்சி

குறிப்பு (இவர் மீது ஏற்கனவே தஞ்சை பிரபல துணிக்கடையில் கட்டாயப்படுத்தி துண்டு கூட இலவசமாக வாங்கினார் என்ற சர்ச்சையும் இவர் மீது உண்டு. தேர்தலுக்குத் தேர்தல் இதுபோன்ற கட்டாய வசூல் சர்ச்சையில் சிக்குவது இவருக்கு சர்வ சாதாரணம்)

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *