செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாபாரிகள் சங்கத்தினரை அழைத்து கட்டுப்பாடுகளை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணகுமரன் தலைமையில் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் தமிழக அரசு அறிவித்துள்ள கொரான இரண்டாம் கட்ட அலையால் தினந்தோறும் தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருவதால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரவுநேர ஊரடங்கு இன்று முதல் தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது .

 

இதை அனைத்து வியாபாரிகளும் கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசுக்கு வியாபாரிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் தமிழக அரசின் உத்தரவை மீறும் பட்சத்தில் வருவாய்த்துறை மூலம் கடைக்கு சீல் வைக்கப்படும் என வியாபாரிகளிடம் கூறினார். இக்கூட்டத்தில் செங்கம் ஆய்வாளர் உட்பட வியாபாரிகள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *