திமுக சட்டமன்ற கட்சித்தலைவராக மு. க. ஸ்டாலின் தேர்வு !* *நாளை மாலை கவர்னர் பன்வாரிலாலை சந்திக்கிறார்

Spread the love

திமுக சட்டமன்றக்கட்சித்

தலைவராக மு.க.ஸ்டாலின் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார், இதைத்தொடர்ந்து நாளை மாலை கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்தித்து ஆட்சியமைக்கும் உரிமை கோருகிறார்,

தமிழக சட்டசபை தேர்தல் கடந்த ஏபரல் 6ம்தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது, இந்த தேர்தலின் முடிவுகள் மற்ற மாநிலங்களின் வாக்குப்பதிவு இருந்ததால் 25 நாட்கள் கடந்து

மே 2 ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது, பரபரப்பான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 158 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது, இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக வரும்

7 ம்தேதி காலை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் முதல்வராக பொறுப்பேற்கிறார், கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பதவி ஏற்பு விழா ராஜ்பவன் திறந்தவெளி வளாகத்தில் எளியமுறையில் நடைபெறுகிறது, இந்த விழாவில் பங்கேற்க திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிகிறது,

இதனையொட்டி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம், சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது, இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று இரவு 6.40 மணியளவில் அறிவாலயத்திற்கு வந்தார், அவரை திமுக தொண்டர்கள் , தளபதி வாழ்க கலைஞர் வாழ்க , முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க என்று உற்சாகமுழக்கமிட்டு வரவேற்றனர், இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது, இந்க கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 கூட்டணிக்கட்சியினர் உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர், திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், சட்டமன்ற கட்சித்தலைவராக ஸ்டாலினை முன்மொழிந்தார் பலத்த கைத்தட்டலோடும் வாழ்த்துக்கோஷங்களுடன் திமுக எம்எல்ஏகள் அதை வழிமொழிந்தனர், இதைத்தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் , சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதி்க்கு மலர் அஞ்சலி செலுத்தினார், அவரை தொடர்ந்து திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர்.பாலு, துணை பொதுசெயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா ஐ.பெரியசாமி, எவ.வேலு உள்ளிட்டோர் கருணாநிதி சமாதியில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் , முதல்வராக பதவியேற்க இருக்கும் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார், இதற்கிடையில் திமுக சட்டமன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின் , நாளை மாலை 4 மணியளவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார், இதன் பின்னர் திமுக தலைவர் ஸ்டாலினை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுப்பார் என்று தெரிகிறது,

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *