கொரானாவுக்கு அஞ்சாத வியாபாரிகள் அபராதத்தை கண்டு ஓட்டம்

Spread the love

கடலூர் புதுநகர் பகுதியில் அரசு விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு பெருநகராட்சி அதிகாரிகளுடன் அபராதம் விதித்த காவல்துறையினர்

கடலூர் புதுநகர் புதுப்பாளையம் மஞ்சக்குப்பம் லாரன்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசு விதித்த கொரானா விதிகளை மீறிய ஏராளமான சாலையோர சிறு பழக்கடைகள். சமூக இடைவெளியின்றி வியாபாரம் செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வாட்ஸ்அப் புகைப்படத்தின் வாயிலாக புகார் தெரிவித்தனர் இதன் அடிப்படையில்

 

 

காவல்துறையினருடன் பெருநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் உடன் இணைந்து 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளும் கூட்டம் அதிகமாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இயங்கிய இனிப்பு கடைகள் மல்லிகை கடைகளை கண்டுபிடித்து சில் வைத்தும் சிலரை எச்சரிக்கை விடுவித்தும் கடலூர் பெரு நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியதால்

 

கடலூர் முக்கிய இடமாக திகழும் மஞ்சக்குப்பம் புதுநகர் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது

 

 

புதுநகர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சாந்தி உத்தரவின்பரில்

ஆய்வாளர் இராதகிருஷ்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர் எழில்தாசன் விதிமீறல்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்காத பதினைந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்கு 4,500 ரூபாயும் கடலூர் பெருநகராட்சி வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன்.அசேகன். ஆய்வாளர் பொறுப்பு சக்திவேல் மற்றும் வருவாய் பிரிவு உதவி அலுவலர்கள்

கருணாகரன். ஷாஜகான். பரத்.உஷா.சீனிவாசன். மோகன்.லட்சுமணன் உள்ளிட்டவர்கள் புது நகர் காவல் துறையினருடன் இணைந்து சாலையோர கடைகள் தள்ளுவண்டி வியாபாரிகள் தேநீர் கடை வியாபாரி உள்ளிட பத்துக்கும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு சுமார் பெருநகராட்சி அதிகாரிகள் 1500 ரூபாய் அபராதம் விதித்தனர்

 

அபராதம் விதிப்பதை கண்டு விதிமுறைகளை மீறிய மற்ற கடைகாரர்கள் கடைகளை அடைத்து ஓட்டம் பிடித்தனர்

 

ஒரு மணி நேரத்தில் காவல்துறையினர் 4500 ரூபாயும் பெருநகராட்சி ஆயிரத்து 500 ரூபாயும் மொத்தம் சுமார் ஒரு மணி நேரத்தில்

6000 ரூபாய் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது

 

கடலூர் மாவட்ட செய்தியாளர் செல்வமணி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *