திருப்பூா்: செட்டிபாளையம் கூட்டுறவு சொசைட்டியில் அண்ணா திமுகவை சேர்ந்த தலைவர் ரகலை அத்துமீறி ஆவணங்களில் எழுதி அராஜகம் 

Spread the love

செயலாளரை வன்மையாக பேசி சஸ்பென்டான மூன்று பேருக்கு மறுபணி வழங்க முயற்சியால் பெரும் பரபரப்பு

 

திருப்பூா் வடக்கு செட்டிபாளையம் கூ‌ட்டுறவு சொசைட்டியில் சஸ்பென்டான 3 மூன்று நபர்களுக்கு அத்துமீறி அலுவலகத்தில் கும்பலாக நுழைந்து சொசைட்டி செயலாளரை வன்மையாக பேசி ரகலையில் ஈடுபட்டு சஸ்பென்டானவர்களுக்கு சட்டவிரோதமாக மறு பணிநியமனம் வழங்கிய தலைவரின் செயலால் ஊழியர்கள் அதிர்ச்சி

 

திருப்பூா் வடக்கு செட்டிபாளையம் கூட்டுறவு சொசைட்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு பணியில் இருந்த அப்போதைய செயலாளர் மற்றும் அவரது கனவர் ஆகியோரின் தவறின் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருவரும் சொசைட்டிக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறி சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பிறகு இவ்ரகளுடன் தொடர்பில் இருந்த பெண் விற்பனையாளர் மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு அவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் இவர்கள் மூன்று நபர்களுக்கு மறுபணி வழங்க வேண்டி பல்வேறு ப‌ல்வேறு முறை முயற்சித்த போதும் நீதிமன்றம் பணி வழங்க வில்லை. இந்நிலையில் இன்று 20-05-2021 காலை சுமார் 11.00 மணியளவில் திடீரென செட்டிபாளையம் கூட்டுறவு சொசைட்டியில் யாரும் இல்லாமல் செயலாளர் மட்டுமே இருந்த நேரத்தில் கும்பலாக தலைவர் உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்டவர்கள் அத்துமீறி நுழைந்து செயலாளரை கடுமையாக தகாத வார்த்தைகளால் திட்டி கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சட்டவிரோதமாக சொசைட்டியில் செயலாளராக செயலாளர் பாதுகாப்பில் இருந்து வரும் தினசரி வருகை பதிவேடு மற்றும் பதிவேடுகளை தலைவரே எடுத்து அதில் சட்டத்திற்கு புறம்பாக சஸ்பென்டான மூன்று நபர்களின் பெயர்களை எழுதி மறுபணி நியமனம் வழங்க அவர்களை சொசைட்டிக்குள் வர சொல்லி சட்டவிரோதமாக கையெப்பம் வாங்கி உள்ளார். இது சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை அடுத்து இது தொட‌ர்பாக மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி, இணைப்பதிவாளர் ஆகியோரிடம் புகார் அளிக்க தற்பொழுது சொசைட்டியில் பணியாற்றி வரும் ஊழியர்கள், நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து பல்லடம் சாலையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசை உடனடியாக அண்ணாதிமுகவை சேர்ந்த சொசைட்டி தலைவர் உள்ளிட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது .

  1. மேலும் அரசிற்கு பல லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *