விவசாய பெருமக்களுக்கு கோடைமழையில்  சம்பா நெல் பயிரிடுவதற்கு மற்றும் திரவ உயிர் உரங்கள் உள்ளது என மணிகண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆ.கோமதி தெரிவித்துள்ளார்

Spread the love

அந்த நல்லூர் வட்டாரம் துணை வேளாண்மை விரிவாக்க மையம், திருவானைக்கோவிலில் குறுவை சாகுபடிக்கான நெல் இரகம் சான்று பெற்ற C051 நெல் விதைகள் இருப்பு உள்ளது. மேலும் இடுபொருட்களான நெல் நுண்சத்து சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம் (நெல்), பாஸ்போபாக்டீரியா மற்றும் திட உயிர் உரங்கள் ஆகியவை போதுமான அளவு இருப்பு உள்ளது. மானிய விலையில் இடுபொருள்களை பெற்று பயனடையுமாறு அந்தநல்லூர் வட்டார விவசாய பெருமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

உத்தமர்சீலி,கிளிக்கூடு, பனையபுரம், திருவளர்ச்சோலை. திருவானைக்கோவில், கொண்டயம்பேட்டை பகுதி விவசாயிகள் மற்றும் அந்தநல்லூர் வட்டார அனைத்து குறுவை விவசாயிகளும் வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பயன் பெறுமாறு அறிவுறுத்தி உள்ளார். தொடர்புக்கு போன் நம்பர் 7904718572

தற்போது இரண்டு வட்டாரங்களிலும் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கோடை மழையை பயன்படுத்தி தங்களது நிலத்தை கோடை உழவு செய்து குறுவை நெல் மற்றும் சம்பா நெல் பயிரிடுவதற்கு முன் கோடை உழவு செய்தவன் மூலம் புழு பூச்சிகள்/முட்டைகள் கோடை உழவின் போது வெளி கொணரப்பட்டு அழிக்கப்படுகிறது. மண்ணின் நீர் பிடிப்பு தன்மை அதிகமாகிறது. மழை நீர் பூமிக்குள் இறங்கி மண் பொலபொலப்பு அடைந்து நெல் பயிருக்கும் மற்றும் அனைத்து பயிர்களுக்கும் தேவையான நீரை நிலம் தேக்கி வைக்கிறது. போர்வெல், குளம்/கிணறு ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்கிறது. மண் மற்றும் நிலத்தடி நீர் உப்பு தன்மை குறைந்து மண் வளம் கூடுகிறது.

எனவே தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலத்தில் கோடை உழவு செய்து பயன் அடையுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஆ.கோமதி செய்தி குருப்பில் தெரிவித்துள்ளார்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *