எடப்பாடியை விட பெரிய பதவியான கொறடா பதவிக்கு ஸ்கெட்ச் போடும் ஓபிஎஸ்!

Spread the love

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகி விட்டதால் அதனை விட பெரிய பதவிக்கு ஓபிஎஸ் காய்களை நகர்த்தி வருவதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன

 

 

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை

நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ஈபிஎஸ்-ஓபிஎஸ் பேச்சுவார்த்தையின் போதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை

இந்த ரேஸில் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஓபிஎஸ்

 

 

 

பெரும் சர்ச்சைகள், போராட்டங்களுக்கு இடையே எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுமுதலே அதிமுகவில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல் போக்கு தீவிரம் அடைந்துள்ளது. கட்சி ஒருவர் தலைமையில் கட்டுப்பாட்டில் முழுமையாக இருக்க வேண்டும் என்று இருவருமே விரும்புகின்றனர். இதற்காக பல்வேறு மூவ்களை இருவருமே செய்து வருகின்றனர்.

 

முன்னதாக, முதல்வர் வேட்பாளர் தேர்வின்போதும் இதேபோன்றதொரு பிரச்சினை எழுந்தது. ஆனால், அப்போதும் கட்சி நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிசாமி பின்னால் அணிவகுத்ததால் ஓபிஎஸ் தன் வாயாலேயே எடப்பாடி பழனிசாமியை முதல்வராக முன்மொழிந்தார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற அவர் எவ்வளவோ முயற்சித்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

 

இப்படியே போனால் நம்பர் 2 பொசிஷனிலேயே இருந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும், சிறிது காலத்தில் அனைத்தும் எடப்பாடியின் கண்ட்ரோலுக்கு என்று விட்டால் நம்பர் 2 இடமும் பறி போய் விடும் என்பதால் எடப்பாடி பழனிசாமி வகிப்பதை விட முக்கியமான பதவி ஒன்றுக்கு ஓபிஎஸ் ஸ்கெட்ச் போடுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

 

அவர்களிடம் மேலும் நாம் கேட்டபோது, சட்டப்பேரவையில் கட்சியின் உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் பலம் வாய்ந்த நபர் கொறடா. கட்சியின் தலைவராகவே இருந்தாலும், பேரவையில் கொறடா உத்தரவை மீறி நடக்கமுடியாது. கொறடா உத்தரவை மீறி நடந்தால் எம்.எல்.ஏ பதவியை விட்டே நீக்க பரிந்துரைக்கும் அதிகாரமும் அவருக்கு உள்ளது. எனவே, ஒவ்வொரு கட்சியிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அப்பதவி இருக்கிறது.

 

 

இதனால், அந்த பதவியை பெற ஓபிஎஸ் முனைப்பு காட்டுவதாக கூறுகிறார்கள். சட்டப்பேரவையில் யார் பேச வேண்டும், யார் பேசக் கூடாது என்ற முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர் கொறடா. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் கட்டுக்குள் வைக்கலாம் என்பது ஓபிஎஸ் போடும் மாஸ்டர் ப்ளானாம்.

 

ஆனால், இதுபற்றிய பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், ஈபிஎஸ் இதற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில். ஈபிஎஸ் தன்னுடைய ஆதரவாளார்களை அந்த பதவிக்கு நியமிக்க திட்டமிட்டு வருகிறார். ஓபிஎஸ் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இறுதியாக கே.பி.முனுசாமியை நியமிக்கலாம் என்று ஒரு கருத்தும் ஈபிஎஸ்-யிடம் உள்ளது. ஆனால், கே.பி.முனுசாமி தற்போது ஈபிஎஸ் ஆதரவாளார் என்பது ஓபிஎஸ்-ற்கு தெரியாமல் இருக்குமா? எனவே, தனது ஆதரவாளாரான மனோஜ் பாண்டியனை மற்றொரு சாய்ஸாக ஓபிஎஸ் வைத்துள்ளாராம்.

 

ஜூலை மாதம் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அதிமுகவில் யார் எதிர்க்கட்சி துணைத் தலைவர், கொறடா என்று சட்டப்பேரவை செயலாளரிடம் தெரிவிக்க வேண்டும். இந்த பின்னணியில் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ஈபிஎஸ்-ஓபிஎஸ் பேச்சுவார்த்தையின் போதும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. முன்னதாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும், தனது எதிர்ப்பை காட்டும் விதமாக ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. எனவே, இம்முறை எப்படியாவது இந்த ரேஸில் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்பில் ஓபிஎஸ் இருப்பதாக கூறுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். நிலைமை மாறுமா தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *