தனியார் நிதிநிறுவனம் சுயஉதவி குழு பிரச்சனைகளுக்கு நிரந்திரமாக தீர்வு காண அரசே வட்டியில்லா கடன் திட்டத்தினை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் கோரிக்கை

Spread the love

உலக முழுவதும் கொரோனா பெரும் தொற்று மக்களை கடந்த ஆண்டு முதல் ஆட்கொண்டு கடுமையான சிரமங்களை சந்தித்து வரும் நிலை பல லட்ச கணக்கான உயிர்களை இழந்துக்கொண்டு இருக்கும் நிலை தொடர்கிறது .

 

அதிலும் ஏழை எளிய நடுத்தர மக்கள் தொழிலாளார்கள் நிலை மிகவும் கவலைக்கிடம் உள்ளது.

கடந்த ஆண்டு முதல் பொ.ருளாதார இழப்புகளை சந்தித்து வரும் சூழ்நிலையில் தள்ளப்பட்டு உள்ளார்கள்

தங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் சவாலாக உள்ளது

 

தொற்று நோய் இல்லாத காலத்தில் ஏழை எளிய மக்கள் தங்களின் அடிப்படை கட்டமைப்பு சுப காரியங்கள் திருமணம் மேலும் கல்வி மருத்துவம் ஆகியவை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தனியார்நிதி நிறுவனங்கள் சுய உதவிக்குழக்களின் நாடுகிறார்கள்

 

இதன்படி நிதிநிறுவனங்கள் அவர்களுக்கு வார மாதத்தவணையாக பணத்தை வழங்கிறார்கள் இந்த தவணை செலுத்த காலம் கடந்தால் கூடுதல் அபராத தொகையை வசூலிக்கப்படும் நடைமுறைதான் செயலில் உள்ளது

 

இந்நிலையில் கொரோனா பெரும் தொற்று உலகத்தினை ஆட்கொண்டு தொடரும் நிலையில் தனியார் நிதி நிறுவனங்கள் தங்களின் வசூல் வேட்டையை நிறுத்துவதாகவும் தெரியவில்லை மேலும் இந்த தொற்று காலத்தில் பணத்தை செலுத்த முடியாத ஏழை எளிய நடுத்தர மக்களிடம் வட்டிகளை வாங்குவதை நிறுத்துவதாகவும் இல்லை

 

மேலும் அரசும் ரிச்வர் வங்கி(RBI)வழிகாட்டி நெறிமுறைகளை அறிவுகளை அறிவித்தும் அரசுகள் பல முறை அறிவுறுத்தல் செய்தாலும் தனியார்நிதி நிறுவனங்கள் அவற்றினை பெரிது படுத்துவதுமில்லை

தொடர் நெருக்கடி வருவதால் தமிழக அரசே மாவட்ட வாரியாக கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளது இது ஒருபுறம் இது எந்த அளவுக்கு தீர்வு எற்படும் என்பது கேள்விக்குறி

 

அரசும் தனியார்நிதி நிறுவனங்களிடம் கட்டாயப்படுத்தி வசூலிப்பதை தடுக்க வலியுறுத்தியுள்ளது

ஆனால் தனியார்நிதி நிறுவனங்கள் தங்களின் நடைமுறைகளை மாத்துவதாக தெரியவில்லை

 

கொரோனா தொற்று காலத்தில் மாத வாரத் தவணை பணம் செலுத்த தவறினால் அதற்கும் வட்டியும் இதனைப்போல் இருப்பு தொகைக்கும் சேர்த்து

வட்டி கட்ட வேண்டும் இதனை கடன் செலுத்தும் இறுதி நேரத்தில் இந்த பணத்தை அவர்களின் கணக்கில் இணைத்து விடுவார்களாம் இந்த நடைமுறை மாற்றுவதாக தெரியவில்லை

 

இதுபோன்ற தொற்று காலத்தில் நெருக்கடியும் மனஉளைச்சல் அதிகப்படுத்தும் நிகழ்வே தொடர் கதையாக உள்ளது

 

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள்

அனைத்து ஏழை எளிய நடுத்தர தொழிலாளார்கள் சிறுகுறு தொழிலாளார்கள் மக்களுக்கு வட்டியில்லாத கடன் வசதிகளை வழங்க வேண்டும் அரசு ஆவணம் செய்ய வேண்டும் இந்த தனியார் நிதிநிறுவனங்கள் சுய உதவிக்குழுக்கள் தங்களை மாற்றிக் கொள்வது கடினம் லாப நோக்கில் செயல்படும்

தனியார்நிதி நிறுவனங்களிடம் எந்த மாற்றத்தையும் எதிர்பார்ப்பது கடினம்

 

தமிழக அரசு இந்த திட்டத்தினை நாட்டிற்கே முன்மாதிரியாக செயல்படுத்த தமிழக அரசு வட்டியில்லா கடன் திட்டத்தினை நடைமுறைப்படுத்த சிறப்பு கவனம் செலுத்த பொதுநலம் மக்கள் நலனையும் முன்நிறுத்தி இந்த கோரிக்கையை இயக்கத்தின் சார்பாக சமர்பித்து வலியுறுத்துகிறோம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *