தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழு மற்றும் மக்கள் உரிமை இயக்கம் சதுரங்கப்பட்டினம் கிளை உறுப்பினர்கள் சார்பாக நான்காவது கட்டமாக இன்று சுமார் 160 குடும்பங்களுக்கு குரானா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராமம் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு மற்றும் மக்கள் உரிமை இயக்க உறுப்பினர்கள் சார்பாக குராண இரண்டாவது அலையின்
தீவிரத்தையும் பொருட்படுத்தாமல் முன்கள பணியாளர்களாக பணியாற்றிய சுகாதார பணியாளர்கள், எரிவாயு உருளை வினியோகிக்கும் 20 நபர்களுக்கு சதுரங்க பட்டினத்தில் அரிசி காய்கறி மளிகை பொருட்கள் குரானா நிவாரண பொருட்களாக வழங்கப்பட்டன.

அதற்குப் பின்பு செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் கிராமத்தைச் சேர்ந்த தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடத்தில் உள்ள 86 குடும்பங்களுக்கு குரானா நிவாரண பொருட்கள் ஆக அரிசி காய்கறிகள் திரு லூயிஸ் வழக்கறிஞர் அவர்களின் முன்னிலையில் வழங்கப்பட்டன.

அதற்குப் பிறகு திருப்போரூர் வட்டம் நெம்மேலி கன்னிமா நகரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் 50 நபர்களுக்கு திரு வழக்கறிஞர் அசோக் குமார் அவர்களின் தலைமையில் அரிசி காய்கறி பொருட்கள் நிவாரண பொருட்களாக வழங்கப்பட்டன.

மேற்கண்ட நிகழ்வில் தேசிய லஞ்ச ஊழல் கண்காணிப்பு குழுவின் சதுரங்கப்பட்டினம் கிளை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நிதி உதவி அளித்த நல் உள்ளங்கள்
1. திரு பிரதீப் சதுரங்கப்பட்டினம்
2. திரு இராமு சதுரங்கப்பட்டினம்
3. திரு மனோகரன் ஐயா செங்கல்பட்டு
4. திரு மருத்துவர் பாலசுப்பிரமணியம் சதுரங்கப்பட்டினம்
5. Techno fab engineering, சதுரங்கப்பட்டினம் ஆகியோர்கள் உதவிகளை அளித்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *