தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி . முதலிடம் பிடித்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ். .

Spread the love

தென் மண்டல அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சனிக்கிழமை திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் செந்தாமரை கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் 09 காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 02 உதவி காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் முதல் கட்டமாக 9mm PISTOL/REVOLVER – 25 meters சுடும் போட்டியில் முதலிடமும், இரண்டாம் கட்டமாக INSAS RIFLE – 50 Yards சுடும் போட்டியில் மூன்றாம் இடமும் பிடித்து துப்பாக்கி சுடும் போட்டியில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

 

வெற்றிபெற்ற தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் க்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் செந்தாமரைக்கண்ணன் வெற்றிக் கோப்பை வழங்கி கௌரவித்தார்.

Print Friendly, PDF & Email