எம்.எல்.ஏ உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு சிலம் பத்தில் மூன்று வகையான உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி

Spread the love

கரூர் மாவட்டம்  குளித்தலையில், தி.மு.க., மாநில இளைஞர் அணி செய லாளரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியின், 14வது பிறந்த நாளை முன்னிட்டு

நகர தி.மு.க., மற்றும் பஞ்சபூதா சர்வதேச தற்காப்பு கலை
சம்மேளனம் இணைந்து, சிலம் பத்தில் மூன்று வகையான உலக சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

குளித்தலை எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார். தற்காப்பு கலை கரூர் மாவட்ட தலைமை பயிற்சியாளர் கதிரேசன் வரவேற்றார்.

– தி.மு.க., மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் . பல்லவி ராஜா, ஒன்றிய செயலாளர் சந்திரன்,முன்னாள் யூனியன் சேர்மன் தியாகராஜன்,நகர பொருளாளர் தமிழரசன் மற்றும் பஞ்சபூத சர்வதேச தற்காப்பு கலை
சம்மேளன நிறுவனர் தலைமை பயிற்சியாளர் சதீஷ்குமார் – ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் – தொடர்ந்து, 4 மணி நேரம் – கண்ணை கட்டிக்கொண்டு -இரு கைகளால் சிலம்பம் சுற்றியும், பானை மீது நின் றவாறும் கம்பை சுற்றினர். பின்னர் மாணவ, மாணவியருக்கு எம்.எல்.ஏ., மாணிக்கம் பதக்கம், சான்றிதழ் வழங் கினார்.

நகர பொறியாளர் அணி கணேசன், , அரசு வழக்கறிஞர் மற்றும் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நீலமேகம், துணை அமைப்பாளர் பிரகாஷ் இளைஞரணி அமைப்பாளர் விஜயபிருந்தாவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *