மீண்டும் முன்னாள் அமைச்சர் தொடர்புடைய வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு

Spread the love

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை

கடந்தவாரம், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 களில் சோதனை நடைபெற்ற நிலையில் மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை, நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்தவாரம், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 69 களில் சோதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் நாமக்கல், சேலம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 13 இடங்களில் இந்த சோதனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய 10 இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல, சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள, தங்கமணியின் நண்பர் குழந்தைவேலுவின் மகன் மணிகண்டனின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது

Print Friendly, PDF & Email