கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி திருக்கோவில் மார்கழி மாத திருவிழா 9-ம் திருவிழாவான சப்தவர்ண காட்சி நேற்று இரவு நடைபெற்றது.

Spread the love

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்கி 20- ந் தேதி வரை நடக்கிறது.

 

 

19-ந்தேதி காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற்றது. இதில் சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்கள் நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தது . நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமல்லாது.

கேரளாவிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி டிஎஸ்பி. ராஜா தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. நான்கு ரத வீதிகளிலும் இந்து அமைப்புகள் சார்பில் சுக்கு காபி, பால், தண்ணீர் பாட்டில்கள், அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

 

திருவிழாவின் இறுதி நாளான 20 -ந் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், மாலை 5 மணிக்கு நடராஜ மூர்த்தி வீதி உலா வருதலும், இரவு 9 மணிக்கு ஆராட்டு விழாவும் நடைபெறுகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published.