பேராவூரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Spread the love

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் உள்ள பேரூராட்சி வணிக வளாகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பேராவூரணியில் சாலை விரிவாக்க பணிக்காக பேரூராட்சி வணிக வளாகத்தில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகர், உதவி பொறியாளர் அருண்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் பழனிவேல் ஆகியோர் மேற்பார்வையில் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டன. சாலை விரிவாக்கப் பணிக்காக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்டு வருவதாக பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published.