தேசிய இலஞ்சம் ஊழல் எதிர்ப்பு கண்காணிப்பு குழு இயக்கம் 15 ஆண்டுகளாக நிறுவனர் Dr.T.R. ராஜமோகன் தலைமையில் சமூக சேவையின் முன்னோடியாக நாம் செயல்படுகின்றோம் என்பது யாவரும் அறிந்ததே , எத்துனையோ நபர்கள் பொறுப்பு வகிக்கின்றார்கள் அவர்கள் செயல்பாடு சரியில்லையெனில் எமது கவனத்திற்கு வந்தவுடன் நீக்கம் செய்யப்படுகின்றார்கள்
இதில் 2018 ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியில் வசிக்கும் S.செல்வகணேஷ் என்பவரை நமது மாநில செயலாளர் நிலக்கோட்டை வெள்ளைச்சாமி அவர்களின் பரிந்துரையில் அவரை மாநில பொறுப்பிற்கு நியமித்து பிறகு அகில இந்திய தலைவராக டிசம்பர் 2020 வரை நியமிக்கப்படுகிறார். இக்காலத்தில் அவருடைய செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியதால் அவருக்கு மீண்டும் அடையாள அட்டையை புதுப்பித்து வழங்கவில்லை .பிறகு தான் மோசடியே ஆரம்பமாகிறது அந்த மோசடிக்காரர் தான் ஏற்கனவே வகித்த பொறுப்பின் மூலமாக அந்த அமைப்பை தான் அமைப்பு என்றும் அதை லோகோவையும், அதுபோல் அந்த பதிவு என்னையும் (Reg .no 215 1v.)என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் என் பெயரை பயன்படுத்தி நிர்வாகிகளை நியமித்து போலியான கட்டமைப்பை ஏற்படுத்தி வஞ்சகமாக மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திகிறார் என்பது தெரியவருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் இதில் யாராவது ஏமாற்றப்பட்டால் நாங்கள் பொறுப்பு ஏற்க மாட்டோம். புதிய அமைப்பை உருவாக்கி நடத்தட்டும் இதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. இது தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என செய்திக் குறிப்பில் A.P.அஸ்தமத் அலி தேசிய செயலாளர் தெரிவித்துள்ளார்.