தமிழகத்தில் இன்று (ஜன.6) முதல் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார

Spread the love

ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்திலும் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி புதிய கரோனா கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 10ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே தொடர்ந்து தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தமிழக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில்,

தமிழகத்தில் நாளை(ஜன. 6) இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு.

பள்ளி, கல்லூரிகள் ஆன்லைனில் மட்டுமே வகுப்பு எடுக்க வேண்டும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published.