தஞ்சாவூர் பிளஸ் 2 மாணவி தற்கொலை விவகாரம் குளித்தலை காந்திசிலை முன்பு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Spread the love

தஞ்சாவூரில் தனியார் பள்ளி ஒன்றின் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைக்கேல்பட்டியில் இருக்கும் அந்த பள்ளியில் +2 படித்துக்கொண்டு இருந்த மாணவி ஹாஸ்டல் வார்டன் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஹாஸ்டல் வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மதமாற்றத்தால்தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் இந்து முன்னணி கரூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சார்பில் குளித்தலை காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்து வழக்கறிஞர் முன்னணி மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டாய மத மாற்றத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் சாவுக்கு நீதி கேட்டும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், மத மாற்ற தடைச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென 50க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Print Friendly, PDF & Email