முதுகுளத்தூர் அருகே பொருத்தாத மீட்டருக்கு கரன்ட் பில்?:விவசாயி அதிர்ச்சி!

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள வெங்கலக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகம். இவர் தனது நிலத்தில் விவசாய மின்சாரம் பெறுவதற்காக, தாட்கோ மூலம் விளங்குளத்தூர் கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று மின்இணைப்பு கோரியுள்ளார். கடந்த ஆட்சியில் இலவச மின்சாரம் ஏதும் வழங்கப்படாததால், புதிதாக தனது நிலத்திலுள்ள மின்மோட்டாருக்கு, 3ஏ1 மின்சாரம் கேட்டு கடந்த 15.10.2020-ல் புதிதாக மின்சாரத்திற்கு மனு செய்துள்ளார். 18.02.2021-ல் மின்சார ஊழியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, ரூ12,300/- வங்கி டிடியாக பணம் செலுத்தி 3 ஏ1 மின்இணைப்பு கோரியுள்ளார். இது சம்பந்தமாக கடந்த 11 மாதங்களாக தினமும் அலைந்து அவருக்கு, மின்இணைப்பு வழங்கப்பட வில்லை. இது சம்பந்தமாக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு தபால் மூலம் புகார் அனுப்புள்ளார் விவசாயி சண்முகம்.

உயரதிகாரிகளின் விசாரணையில் விவசாயி சண்முகத்திற்கு மின் இணைப்பு வழங்கிவிட்டதாகவும், அவர் மின் கட்டணம் கட்டவில்லை என தகவல் வர, தற்போது பொருத்தாத மீட்டருக்கு மின்கட்டணமும் செலுத்திவிட்டு, என்ன செய்வதென புரியாமல் தற்போது நீதிமன்றம் செல்வதாக தகவல்.

 

இதுகுறித்து விவசாயி சண்முகம் கூறுகையில்:-

 

நான் கட்டணம் செலுத்தி மின்சாரம் உபயோகம் செய்ய 15.10.2020-ல் மனு செய்தேன். எனது விவசாய இடத்தை பார்வையிட்டு, மதிப்பீடு செய்யவே 3 மாதம் காலதாமதம் செய்தனர்.பின் வங்கியில் ரூ 12,300க்கு டிடி எடுத்து முறையாக பணம் செலுத்தி மின் இணைப்பு கோரினேன். இதுவரை மின்இணைப்பு எனக்கு வழங்கவில்லை. ஆனால் கரன்ட் பில் கட்ட சொன்னார்கள்.தற்போது அதனையும், ஆன்லைனில் கட்ட முற்படும்போது, 6.11.2021-ல் இணைப்பு வழங்கப்பட்டு, மீட்டர் எண்:1127892 எனவும், எனது சர்வீஸ் எண்: 352029461 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சரி என கரண்ட் பில்லையும் கட்டிவிட்டு வந்து விட்டேன் என்றார் பரிதாபமாக….

முதுகுளத்தூர் மின்சார வாரியத்தில் முறையாக எந்த வேலையும் நடைபெறுவதில்லை. பழுது ஏற்பட்டால், பொருட்கள் இல்லை என,சரி செய்ய நாள் கடத்துகின்றனர் அதிகாரிகள். நாங்கள் வேலைக்கு சென்றால், சில தினங்களுக்கு முன் கூட தூவல் கிராமத்தில் எங்களது இரு சக்கர வாகனத்தை கூட பறித்து வைத்துக்கொண்டனர். அதற்கு எந்த அதிகாரியும் தலையிடவில்லை.பின்னர் கெஞ்சி, அவர்களிடம் மன்னிப்பு கேட்டு எடுத்து வந்தோம் என்றார் ஒரு மின்சார ஊழியர்.

Print Friendly, PDF & Email