கரூர்: குளித்தலையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு அலுவலகத்தை திறந்து வைத்த மாநில செயலாளர்

Spread the love

கரூர் மாவட்டம் குளித்தலை சபாபதிநாடார் தெருவில் குளித்தலை ஒன்றிய குழு இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கட்டிட அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. குளித்தலை ஒன்றிய செயலாளர் பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துசெல்வன் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் இளங்கோவன், சங்கரநாராயணன், ரெங்கசாமி, ராஜேந்திரன், சுப்பிரமணி, பெரியசாமி, சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வருகைபுரிந்து குளித்தலையில் புதியதாக கட்டப்பட்ட வரதராஜன் நினைவகம் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றி ஒன்றிய குழு நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துகொண்டார்.

காரல் மார்க்ஸ் படத்தை மாநில குழு ஸ்ரீதர், உமாநாதத் படத்தை மாநில குழு ஜெயசீலன், வரதராஜன் படத்தை மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, ஜெயவீரன் படிப்பகத்தை மாவட்ட செயற்குழு ராஜீ ஆகியோர்கள் திறந்து வைத்து சிறப்பித்தனர்.

அதன்பிறகு குளித்தலை சுங்ககேட்டில் அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைகமிட்டி செயலாளர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், கிளைச்செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Print Friendly, PDF & Email