நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் தேர்வுநிலை பேரூராட்சியில் புதிதாக வாரசந்தையை மேம்படுத்துதல் ரூ 90.76 லட்சத்தில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.தற்பொழுது இப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியனது எஸ்டிமேட் படி சரியானபடி நடைபெறவில்லை என பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். அதனை உடனே ஆய்வு செய்ய நாமக்கல் மாவட்ட பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ஜவஹர் எர்த் ஒர்க் பவுண்டேஷன் ,சென்ட்ரிங், கம்பங்களில் வகைகள் அரசு அங்கீகாரம் பெற்ற எம் சாண்ட் , 1,1/2கல் ஜல்லிகள்மற்றும் அதனுடைய திக்னஸ் மற்றும் எஸ்டிமட்அளவுகள் படி ஆய்வு செய்தார்.ஆய்வு செய்யும்போது அங்குள்ள பொதுமக்கள் கான்கிரீட் போட்ட பிறகு சரியாக பியூரிங் பண்ணவில்லை என AEE யிடம் தெரிவித்தார்கள்.உடனே அவர் அங்குள்ள ஒப்பந்ததாரரிடம் சரியான பியூரிங் பண்ணவேண்டும் பொதுமக்கள் குறை கூறும் அளவிற்கு வேலைகள் செய்ய கூடாது என அறிவுரை வழங்கினார்.
இவருடன் பேரூராட்சி தலைவர் Dr சோமசேகர்,செயல் அலுவலர் திலகராஜ் ,பெஸ்ட் இன்புறா ஒப்பந்ததாரர் இளநிலை உதவியாளர் ஜீவா உடன் இருந்தனர்.