திருச்சி, பிப்.06,திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வெள்ளாளப்பட்டி கிராமம் கரட்டுப்பட்டியில் அமைந்துள்ள 06.03.22 அன்று நம்மலுடையகுல தெய்வமான ஸ்ரீ அக்கம்மா ரெங்கம்மா,ஏழுமலையான்,கருப்பசாமி மதுரைவீரன் மற்றும் ஏழு கன்னிமார் தெய்வங்களுக்கு பங்காளிகள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் விரதம் இருந்து கரூர் மாவட்டம் குளித்தலை கடமன்துறை உள்ள காவிரி ஆற்றில் நீராடி புனித நீரான தீர்த்தக்குடம் எடுத்து கொண்டு வந்து வை.புதூரில் பகவதி அம்மனிடம் தீர்த்த குடங்களை வைத்து வணங்கி விட்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் வெள்ளாளப்பட்டி ஊராட்சி கரட்டுப்பட்டியில் அமைந்துள்ள நம்முடைய குல தெய்வத்திற்கு புனித நீரான தீர்த்த குடம் கொண்டு செல்லப்பட்டது.
முதலில் ஏழுமலையான் தெய்வத்திற்கு தீர்த்தத்தைகுளிப்பாட்டி விட்டு அருகிலுள்ள ஸ்ரீஅக்கம்மா ரெங்கம்மாள் தெய்வத்திற்கு தீர்த்தத்தை ஊற்றி குளிப்பாட்டிவிட்டு மற்றும் மதுரைவீரன் கருப்பசாமி ஏழு கன்னிமார் தெய்வத்திருக்கு புனித நீரை குளிப்பாட்டி விட்டு பூஜை செய்து சாமி வணங்கினார்கள்.பின்பு உடுக்கை அடிக்கும் பூசாரி வரவழைத்து சாமி கும்பிடுவது மட்டும் கோயில் கட்டுவதற்கும்குறி கேட்கப்பட்டது