இரும்பூதிப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வீட்டில் இருந்த 35 வயது பெண்ணை பாலியல் ரீதியாக உறவு கொள்ள முயற்சித்த சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் கைது

Spread the love

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுக்கா வெஞ்சமாங்கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் அன்புராஜ் (36). இவர் குளித்தலை அருகே சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

 

சிவாயம் வடக்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இரும்பூதிப்பட்டியில் உள்ள அகதிகள் முகாமில் 35 வயதுடைய திருமணமான பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார் மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக்கு வருவார் என கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதியன்று பகலில் அவரது வீட்டிற்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரை பாலியல் ரீதியாக உறவு கொள்ள முயற்சித்தபோது, பெண் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடி வந்து கிராம நிர்வாக அலுவலருக்கு தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி கிராம நிர்வாக அலுவலரை இன்று கைது செய்து குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர், குளித்தலை நீதித்துறை நடுவர் எண் 2-ல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, அன்புராஜை குளித்தலை சிறையில் அடைத்தனர்.

Print Friendly, PDF & Email