தை அமாவாசை முன்னிட்டு பழவூர் அருகே சூரணிக்கரை கோவிலில் மரண குங்கும திருவிழா நடைபெற்றது

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம் எல்கையில் காவல் தெய்வமாக விளங்கும் ராதாபுரம் தாலுகா பழவூர் சிதம்பரபுரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள சூரணிக்கரை ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயத்தில் தை அமாவாசையை முன்னிட்டு மரண குங்குமத் திருவிழா நடைபெற்றது.

இந்த பூஜையின் சிறப்புகள் அம்சங்கள்

தீய சக்திகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களை விடுவிக்கும் இடமாக திகழும் சூரணி கரையில் பார்ப்பவர் நெஞ்சை பதற வைக்கும் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் அக்காலத்தில் மக்களை துன்புறுத்திய மகிடாசுரனை பதம் செய்து அவனது உதிரத்தை கோரி தன் மேல் இட்டு தன் கோபத்தை தணித்துக் கொண்டாள் நாக காளியம்மன் அதனை கூறும் வகையில் இப்பொழுதும் சுரணி கரையில் இவ்விழாவானது பக்த கோடி பெருமக்கள் முன்னிலையில் நையாண்டி மேளம் முழங்க, பஜனை தாலாட்டு பாடி கொதிக்கும் குங்குமத்தில் ஆபீசத்துடனும் ஆக்ரோசத்துடனும் தன்னை நாடிவரும் மக்களின் குறைகளை தீர்த்து அருள் பாலித்து வருகிறாள். திருவிழாவை காண கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்து ஆக்ரோஷத்தருடன் அருளை பெற்று சென்றனர்.

Print Friendly, PDF & Email