திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கடந்த நவம்பர் 15 ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வு நிலை பேரூராட்சியினை ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழி இல்லா பேரூராட்சியாக 90 நாட்களில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்ததனை தொடர்ந்து உயர்திரு முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி நா. தியாகராஜன் நவம்பர் 24ஆம் தேதி நெகிழி இல்லா ஒழிப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டு பேரணி நடைபெற்றது.
இதனையடுத்து காட்டுப்புத்தூர் பேரூராட்சி நிர்வாகத்தால் நெகிழிப்பை பயன்பாட்டை தவிர்ப்பதற்காக விழிப்புணர்வு பேரணி விழிப்புணர்வு கூட்டங்கள் நெகிழிப் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்குதல் அதன் பாதிப்பு குறித்து அறிவுறுத்துதல் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தேநீர் கடைகள், மளிகை கடைகள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு நடத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பேரூராட்சி உடன் வணிகர் சங்கமும் இணைந்து வாடகை பை என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
வாடகை பையனையும் வாடகைப்பை திட்டத்தினை குறித்து செயல் அலுவலர் சாகுல் அமீது பேரூராட்சிகளின் மண்டல செயற்பொறியாளர் கருப்பையாயிடம் அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்ட உதவி செயற்பொறியாளர் திருமலைவாசன், இளநிலை உதவியாளர்கள் பாரதியார், சித்ரா, ராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.