திருச்சிராப்பள்ளி மாவட்டம் காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமை தாங்கினார்.பேரூராட்சி மன்ற தலைவர் சு.சங்கீதா மற்றும் துணைத்தலைவர் சி.சுதா ஆகியோரின் முன்னிலை வகித்தனர்.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் முக்கிய அங்கமாக பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் குப்பைகளை தரம்பிரித்து வழங்குதல், நகரினை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் ஆகியவை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். வார்டு எண்.07, மேற்கு தவிட்டுப்பாளையம் காலனி பகுதி, நட்சத்திர பூங்கா, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி (கிழக்கு) ஆகிய இடங்களில் தன்னார்வலர்கள், மன்ற உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இணைந்து புல் பூண்டுகளை சுத்தம் செய்து தூய்மை பணி மேற்கொண்டனர். பேரூராட்சி பகுதியில் முக்கிய பகுதிகள், முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் எடுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
பொதுமக்களிடம் நடைப்பெற்று வரும் தினசரி தூய்மை பணிகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டது. மேலும், ஸ்வச் சர்வேக்ஸான் செயலி குறித்து பொதுமக்களிடம் தெரிவித்து பொதுமக்களின் செல்பேசியில் தரவிறக்கம் செய்து பயன்படுத்த தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மன்ற உறுப்பினர்கள், இளநிலை உதவியாளர்கள் இராஜேந்திரன், பாரதியார், சித்ரா,தூய்மை பணி மேற்பார்வையாளர்(பொ) கண்ணன், தன்னார்வலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.