பிக் செய்திகள்: இடி முரசு Tv யின்

Spread the love

சென்னையில் இருந்து நெல்லையை நோக்கி வந்த அரசு போக்குவரத்து கழக விரைவு பேருந்து மதுரை மாவட்டம் மேலூர் அருகே விபத்து.இதில் நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்த ஓட்டுனர் முத்துகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி.அதே போல் விழுப்புரம் அருகில் நடந்த விபத்திலும் விரைவு பஸ் டிரைவர் செங்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் என்பவரும் உயிரிழந்ததாக தகவல் .இரண்டு பஸ்களும் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தை சார்ந்தது என்று கூறப்படுகிறது.

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதியதில் படுகாயமடைந்த தென்காசி பெண் இன்று காலை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சாவு. மற்றொரு பெண் மற்றும் ஆட்டோ டிரைவர் படுகாயம்.

பாளை கேடிசி நகரில் குழந்தை இல்லா ஏக்கத்தில் இளம் பெண் விஷம் குடித்து சாவு .

பாளை அருகே பெற்றோர் திட்டியதால் வாலிபர் விஷம் குடித்து சாவு

நெல்லை கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்து என்ற இளைஞர் குளித்த போது தண்ணீரில் மூழ்கிய தகவல், உடன் வந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் தேடி வருகின்றனர்

நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரது ஐந்து வயது மகன் செல்வம் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே ஆட்டோ மீது கார் மோதியதில் படுகாயமடைந்த தென்காசி பெண் இன்று காலை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சாவு. மற்றொரு பெண் மற்றும் ஆட்டோ டிரைவர் படுகாயம்.

6,7, 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு “TAB” வழங்க முடிவு – செங்கோட்டையன்

6, 7 மற்றும் 8 வகுப்பில் புதிய பாடத்திட்டத்தை டவுன்லோடு செய்து படிக்க ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் டேப் வழங்க மத்திய அரசிடம் 500 கோடி ரூபாய் நிதி கேட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தேமுதிக செயற்குழுக்கூட்டம் ஜூலை 4ஆம் தேதி நடைபெறும்.

தேமுதிகவின் ஆக்கப்பணிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து செயற்குழுக்கூட்டத்தில் ஆலோசனை.

– விஜயகாந்த்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மூன்று மாதங்கள் களை கட்டும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குற்றாலத்தில் மது, மாது, சூது, திருட்டிற்கு பஞ்சமே இருக்காது . தற்போது சீசன் குறிப்பிட்ட நாளுக்கு முன்பா கவே தொடங்கி விட்டதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோத தொடங்கியது. ஆனால் கடந்த ஆண்டு செய்த பாதுகாப்பு போல் இந்த ஆண்டு பாதுகாப்பு என்பது பெயரலவில் மட்டுமே உள்ளது. காரணம் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட கண்காணிப்பு கேமராக்காள் முறையாக உள்ளதா? கண்காணிப்பு அறை எங்கே? என சுற்றுலா பயணிகளின் மகிழ்ச்சியை எற்படுத்த முடியாமல் திணறும் காவல்துறை? காரணம். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் குளித்த பெண்களிடம் இருந்து சுமார் 60 பவுன் நகைகள் திருடப்பட்டு வழக்கு பதிவு நடந்துள்ளது. ஆனால் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு தகவல் தர குற்றாலம் காவல்துறை மறுத்து விட்டது. போதுமான பெண் காவலர்கள் அருவிப்பகுதியில் நியமித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், பெண்கள் குளிக்கும் பகுதியில் பெண் காவலர்கள் முறையாக நியமிக்க வேண்டும் என்றும், பெண்கள் குளிக்கும் பகுதியில் ஆண் காவலர்களை பணி அமர்த்த கூடாது என்றும், தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்ம நபர்களை உடனே கைது செய்ய காவல்துறை தயங்குவது ஏன் என்றும்? அருவிப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் நிலை என்ன? என சுற்றுலா பயணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சீசன் காலங்களிலாவது கண்காணிப்பு கேமரா செயல்படுகிறதா? போதுமான காவலர்கள் தங்கள் பணியிணை செம்மையாக செய்கின்றனரா? என ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென .சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்காசி அரசு மருத்துவமனையில் 29/06/2018 மாலை பிரேதப் பரிசோதனை செய்ய அரசு உழியர் ரூபாய்1000 லஞ்சம் கேட்ட போது எடுத்துஇந்த வீடியோ இதை அனைவரும் தயவு செய்து பகிரவும்

நேபாளத்தலைநகர் காத்மாண்டு ஸ்ரீ பசுபதிநாத் கோவிலுக்கு செல்லுவதே மிகவும் கஷ்டமானது. அதைவிட கஷ்டமானது சிவனை புகைப்படம் எடுப்பது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்ததை அனுப்பியுள்ளோம். தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இதை போஸ்ட் செய்து பகிர்ந்து கொள்ளுங்கள். ஓம் நமச்சிவாய.

Print Friendly, PDF & Email