திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலைய மயில் ரவுண்டானாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர் டிடிவி தினகரன் பரிசு பெட்டகத்திற்கு வாக்கு கேட்டு உரையாற்றியபோது நிலையான நல்லாட்சி அமைய திண்டுக்கல் பாராளுமன்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஜோதிமுருகனுக்கு பரிசு பெட்டகத்திற்கு வாக்களித்து நல்ல பிரதமரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு தாருங்கள் என என்று கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி அண்ணன் மெகா கூட்டணி அமைந்துள்ளதாக கூறுவது அன்புமணி ராமதாஸ் சில மாதங்களுக்கு முன் கூட்டணி இல்லாத கூட்டணி இல்லை அது மானங்கெட்ட கூட்டணி என்று கூறி அவர்களுடன் சேர்ந்துள்ளார்.
ஸ்டாலின் கடந்த மாதங்களில் பேசியபோது ராகுலை அறிவு முதிர்ச்சி இல்லாதவர் என்று பேசிவிட்டு தற்போது ராகுலை பிரதமராக அறிவித்து கூட்டணி என்றால் தமிழக மக்கள் இவரை பற்றி அறியாதவர்களா அதனால் தான் அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்து ஆர்.கே நகரில் டெபாசிட் இழந்தார்.
எடப்பாடி அண்ணனை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்த 18 எம்.எல்.ஏக்களை பதவி நீக்கம் செய்ததால் தான் வந்த இடைத்தேர்தல் எடப்பாடி ஆட்சிக்கு முடிவு என்றும் இடைத்தேர்தலில் 8 பேர் வெற்றி பெற்றால்தான் எடப்பாடி ஆட்சி இல்லை என்றால் எடப்பாடி பழனியில் வந்து மொட்டை அடித்துக் கொள்ள வேண்டியது தான் துரோகம் செய்தவர்களுக்கு பழனி முருகன் தக்க தண்டனை தருவார் என்றும் தமிழகத்திலும் புதுவையிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் 40 தொகுதியிலும் வெற்றி பெற்று பிரதமர் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறினார்.
செய்தியாளர்
பழனி சரவணக்குமார்..