பாடல் -ஆசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் வாழ்த்து

Spread the love

முத்தமிழ் தத்தெடுத்த
முத்துக்கும் ரா அகவை ஜம்ப தை
கடக்கும் முன் அப்படி ஏன் அவசரப்பட்டாய்
வார்த்தைக்குள் முழ்கி
வாழ்வை தொலைத்தாயோ
காசுக்கும் மாசுக்கும் எழுதியவர் மத்தியில் மந்திர சொற்களாள் மந்திரித்துவிட்டவனே
முல்லைபூவை போல்
முகத்தில் உன் சிரிப்பு
நீ இல்லாத பிறந்த நாள்
அலையில்லா கடல்போல் காற்று கடக்காத புல்லாங்குழல் போல்
பாரதியின் வரிகளாய் வசீகரம் செய்வாய் என மகிழும் வேலையில்
பாட்டை மறந்த
பட்டுக்கோட்டை போல்
சட்டென மறைந்தாயோ
மண்ணில் மறக்க முடியாத அளவு
வார்த்தைகளால் வாழ்பவனே
யாரிடம் சொல்வது
உனது பிறந்த நாலை

உன் வார்த்தையால் வசப்பட்டவன்
இந்திரா நாராயணசாமி
திருச்சி
975 1391 3

Print Friendly, PDF & Email