திருச்சி ஜன 05
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே இனாம்சமயபுரம் ஊராட்சியில் உள்ள 9வது வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்கு சீட்டிற்கு பதிலாக வேறு வாக்கு சீட்டுகள் உள்ளதென வேட்பாளர்கள் இருவர் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்தனர்.
மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது இனாம்சமயபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள
9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3பேர் போட்டியிட்டனர். போட்டியிட்டவர்களுக்கு தேர்தல் கடந்த 30ம் தேதி குமரன் உதவிபெறும் துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. அப்போது வாக்கு சீட்டில் 4 போட்டியாளர்கள் சின்னம் இடம் பெற்றிருந்தது. இதனால் போட்டியாளர்கள் மூவரும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டனர். இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு சீட்டில் அச்சிடப்பட்ட
4சின்னத்தில் ஒரு சின்னத்தினை கிழித்து விட்டு வாக்களிக்க வைத்தனர்.
4வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்த வாக்கு சீட்டில்
40வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்த வாக்களித்த சீட்டுகள் இம் மாதம் 2ம் தேதி கொட்டி எண்ணப்பட்டது. அப்போது வாக்களித்த 269 வாக்கு சீட்டுகளும் இருந்தன. அதில்
4வேட்பாளர்கள் சின்னம் இடம் பெற்றிருந்த போது வாக்காளர்கள் வாக்களித்த 40வாக்கு சீட்டுகள் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக
3வேட்பாளர்கள் மட்டுமே இருந்த வாக்கு சீட்டுகள் இருந்தன. வாக்காளர்கள் வாக்களித்த 40வாக்கு சீட்டுகளுக்கு பதிலாக வேறு வாக்கு சீட்டுகள் எப்படி வந்தது . முறையாக
4வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த வாக்கு சீட்டுகள் காணாமல் போனது எப்படி, அதற்கு பதிலாக வேறு வாக்குசீட்டு எப்படி வந்தது என்பது குறித்து பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் நிர்மலாதேவி மற்றொரு வேட்பாளர் ஆகியோர் மண்ணச்சநல்லூர் ஊராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் புகார் குறித்து உரிய விசாரணை இல்லை எனில் 269 வாக்காளர்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தவுள்ளோம் என்றனர்.
பேட்டி : பெரியண்ணன்
Trichy jk