தாய்
தனக்குள் ஒரு ஜீவனைக் கொண்டாட,
மெழுகாக
உருகியவள்.
கருவுற்ற நாள் முதல்
தனக்குள்ளே பேசியவள்.
முகம் பார்க்காத கருவினை
கதை சொல்லி வளர்த்தவள்.
வெளி வராப் பிள்ளைக்கு
முத்தப் பரிசினைத் தந்தவள்.
பிடித்த உணவையும் குழவிக்காக
தியாகம் செய்தவள்.
தூக்கத்தில் கூட விழிப்புடன்
இருக்கும் தாயவள்.
ஆணா பெண்ணா என்றால்
புன்னகையில் உலகைக்
கடந்தவள்.
ஐயிரண்டு திங்கள் சுமையை தவமாய்
எண்ணுபவள்.
இறைவனும் ஆசை கொள்கிறான்
தாய்மையை
அடையவே
தாய்மை வெல்கவே!
அன்புடன்:ராகவி